கொசு கடியால் ஏற்படும் தடுப்பு சொறி! வெறும் 5 நொடிகளில் முகம் கை கால்களில் தடுப்பு மறையும்! இதை டிரை பண்ணுங்க!!

First Published | Apr 14, 2023, 5:17 PM IST

கொசு கடியால் உடம்பெல்லாம் தடுப்புகள், சொறி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவு விளக்குகிறது. 

கோடைகாலம் வந்ததுதான் கூடவே வியர்வை, வெப்பம் என தொல்லைகளும் வந்துவிட்டன. போதாக்குறைக்கு பல பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரிக்கிறது. வீட்டில் கொசுக்கள் அதிகமானால் பல நோய்களுக்கான சாத்தியமும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் கொடூர காய்ச்சல் போன்ற நோய்களை பரப்புவது கொசு செல்லங்கள் தான். 

நாம் கொசுவத்தி சுருளை வைப்பது முதல் பல செடிகளை வளர்ப்பது வரை கொசுவை விரட்ட பல ஏற்பாடுகளை செய்வோம். ஆனால் உடலை கடிக்காமல் கொசுக்கள் விடுவதில்லை. அவை கடிப்பதால் அரிப்பு, தோலில் தடிப்புகள் தோன்றும். குழந்தைகளின் கைகள் சிவந்து போய் காணப்படும். அவர்கள் சொறிந்து கொண்டே இருப்பது பார்க்கவே பாவமாக இருக்கும். இப்படி சொறியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

புதினா 

புதினா இலைகளா செய்த எண்ணெய் கொசுக்கடித்த இடத்தில் தடவ ஏற்றது. இதனால் உங்களுடைய அரிப்பை போக்க முடியும். புதினாவில் குளிரூட்டும் பண்பு உள்ளது. புதினாவை நேரடியாக பயன்படுத்தாமல் 2 துளி புதினா எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கலந்து பூசுங்கள். இது அரிப்பையும், சொறியையும் போக்கும்.  

துளசி இலைகள் 

துளசி இலைகள் நம்முடைய சருமத்தில் உண்டாகும் எரியும் உணர்வைக் குறைக்க பயன்படும். இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் ஆகியவற்றை குறைக்கும். இதற்கு 1 கப் துளசி இலைகளை 1 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வையுங்கள். இதில் பஞ்சை நனைத்து சொறி இருக்கும் இடத்தில் போட்டால் அரிப்பு உடனே போய்விடும்.

பூண்டு 

பூண்டு நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. இதய நோய்கள் தொடங்கி பல நோய்களுக்கு பூண்டு உதவுகிறது. சரும பராமரிப்பிலும் இது நல்ல பலனளிக்கிறது. கொசு கடியால் ஏற்படும் அரிப்பு, எரிச்சலுக்கு நிவாரம் தருகிறது. ஆனாலும் இதை நேரடியாக தோலில் போடக் கூடாது. தீக்காயங்கள் அல்லது காயம் இருந்தால் ரொம்ப டேஞ்சர். பூண்டை நசுக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் போட்டு குழப்பி கொசுக்கடித்த அல்லது அரிக்கும் பகுதியில் போடவும். ஒரு 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை துணியால் துடைக்கவும். 

இதையும் படிங்க: வெந்தயம் நம் உடலில் இவ்வளவு வேலைகளை செய்யுமா? 1 கைப்பிடி வெந்தயத்தில் மறைந்திருக்கிறது இத்தனை நன்மைகள்!!

ஐஸ் கட்டி 

ஐஸ் கட்டிகள் எரிச்சலைக் குறைக்கும். அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி ஆய்வுகளின்படி, கொசு கடித்தால் உண்டாகும் அரிப்புகளை ஐஸ் கட்டி போக்கும் என சொல்லப்படுகிறது. துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து கொசு கடித்த பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும். நேரடியாக சருமத்தில் ஐஸ் கட்டியை வைக்காதீர்கள். சரும எரிச்சலில் இருந்து நிவாரணம் பெற 5 முதல் 10 நிமிடங்களுக்கு துணியில் ஐஸ் கட்டி வைத்து ஒத்தி எடுக்கலாம். ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை தடவலாம்.

இதையும் படிங்க: உங்க சிறுநீரை கவனிக்காம விடாதீங்க! சிறுநீரில் இந்த மாற்றம் இருந்தால், சிறுநீரகப்பை கேன்சர் இருக்கலாம்..!

Latest Videos

click me!