
இந்ந்திய உணவுகளில் தானியமும் ஒன்றாகும். கம்பு, சோளம், ராகி போன்ற முழுதானியங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்தவை. இன்றைய காலகட்டத்தில் கோதுமையும் மக்களிடையே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோதுமை சிறந்த உணவாக இருந்தாலும் அதைவிட ராகி மாவு நல்ல பலன்களை தருவதாக சில தகவல் சொல்கின்றன. இந்த பதிவில் கோதுமையா, ராகியா? எந்த மாவு சிறந்தது என காணலாம்.
ராகி மாவின் நன்மைகள்:
ராகி மாவில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் பாலை விட அதிகமான அளவில் 'கால்சியம்' சத்தை பெற முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அரிசிக்கு பதிலாக சாப்பிடக் கூடிய உணவாக ராகியை சொல்லலாம். ராகியை பாஸ்தா, நூடுல்ஸ், சேமியா போன்ற வடிவங்களிலும் பயன்படுத்தலாம். ஒரு ஆயிவில் ராகியை உணவாக உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் இந்த மாவு பயன்படுபடுகிறது. உடலில் உள்ள காயங்கள் விரைவில் குணமாக ராகி மாவு உதவும்.
இதையும் படிங்க: கேழ்வரகு மாவு கெட்டுப் போகாமல் வருட கணக்கில் பயன்படுத்த சூப்பரான டிப்ஸ் இதோ!!
கோதுமை மாவின் நன்மைகள்:
கோதுமையில் இருந்து தயார் செய்யப்படும் மாவில் ரொட்டி, பூரி, உப்புமா, கேக் உள்ளிட்ட பல உணவுகளை தயாரிக்கலாம். அரிசிக்கும் கோதுமைக்கும் உள்ள பெரிய வித்தியாசமே இதில் காணப்படும் புரதச்சத்து தான். கோதுமையில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை உள்ளன. இரும்பு, துத்தநாகம் ஆகிய தாதுக்களும், வைட்டமின் பி-யும் இதில் காணப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளில் கோதுமையும் அடங்கும்.
இதையும் படிங்க: இப்படி கூட 'கலப்படம்' செய்றாங்களா? வீட்டிலேயே 'போலி' கோதுமை மாவை எப்படி கண்டுபிடிப்பது?
கோதுமை மாவின் குறைகள்:
கோதுமையில் பல நன்மைகள் காணப்பட்டாலும் அதை சிலர் உண்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. செலியாக் நோய் பாதிப்பு உள்ளவர்கள், பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அதை உண்ணக் கூடாது. கோதுமையில் உள்ள பசையம் என்ற பொருள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. கோதுமை அலர்ஜி உள்ளவர்கள் அதை உண்ணும்போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் வரலாம். தோலில் தடிப்புகளோ, அரிப்போ கூட ஏற்படும். கோதுமை உணவுகளை அதிகம் எடுத்தும் கொண்டால் உடல் எடையும் அதிகரிக்கும்.
ராகி மாவின் குறைகள்:
ராகி மாவில் உள்ள கொய்ட்ராஜென்ஸ் (Goitrogens) தைராய்டு சுரப்பை பாதிக்கும் வாய்ப்புள்ளது. ராகியை அதிகம் உண்டால் தைராய்டு செயல்பாடு பாதிக்கப்படும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் ராகியை அதிகம் சாப்பிடக் கூடாது. இதில் உள்ள கால்சியம் சத்து சிறுநீரக கற்கள் பிரச்சனைகளை அதிகமாக்கலாம். நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் வாயுத்தொல்லை அல்லது வயிறு வீக்கம் வரலாம்.
எதை சாப்பிடலாம்?
நீங்கள் கோதுமை தோசை அல்லது சப்பாத்தி தயாரிக்கும் போது அதனுடன் சிறிதளவு ராகி மாவையும் கலந்து சமைப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இரண்டு மாவும் தனித்தனியாக பல்வேறு நன்மைகளைக் கொண்டிருப்பதால் அதை சரியான விகிதத்தில் கலந்து ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது நிறைய பலன்களை பெற முடியும். இப்படி உண்பதால் குடல் செயல்பாடு மேம்படும். இரண்டில் எது சிறந்து என ஒப்பிடாமல் இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள்.