அலர்ஜி எதிர்ப்பு:
ரோஸ்மேரியில் இருக்கும் கார்னோசிக் அமிலம் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் உடலில் வீக்கம், அலர்ஜி ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. இது தவிர இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பை பாதுகாக்கும்:
ரோஸ்மேரியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் தொற்று நோயை எதிர்த்து போராடவும், அதை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தம் & பதட்டம் நீங்கும்
தினமும் ரோஸ்மேரி தண்ணீர் குடித்து வந்தால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகள் குறையும்.