
வினிகர் என்பது வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களில் ஒன்றாகும். சமையலறையில் இருக்கும் கறை முதல் பாத்ரூம் தரையை சுத்தம் செய்வது வரை போன்ற பல விஷயங்களுக்கு வினிகர் உதவுகிறது. ஆனால் சில வீட்டு பொருட்களை சுத்தம் செய்வதற்கு வினிகரை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?
இதனால் அந்த பொருட்கள் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படியானால் வினிகரை கொண்டு எந்தெந்த பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இவற்றை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்த வேண்டாம்:
பளிங்கு
வினிகரில் இருக்கும் அமில கிளினர்கள் பளிங்குகளை சேதப்படுத்தும் தெரியுமா? ஏனெனில் வினிகளில் இருக்கும் அமிலம் தாதுக்களுடன் இணைந்து இருப்பதால் அது பளிங்கை சேதப்படுத்தும். வினிகரை கொண்டு பளிங்கை சுத்தம் செய்தால் பளிங்கில் புள்ளிகள் வரும். இது தவிர, பளிங்கின் பளபளப்பு குறைந்து காலப்போக்கில் மங்கலாகிவிடும். பளிங்கின் பளபளப்பு தக்க வைக்கவும், அதன் தோற்றம் மாறாமல் இருக்கவும் வினிகரை கொண்டு பளிங்கை ஒருபோதும் சுத்தம் செய்ய வேண்டாம்.
கத்திகள்
சமையலறையில் கத்தி அதிகமாக பயன்படுத்துவோம். இந்த கத்தி உலோகம் என்பதால் வினிகரை கொண்டு சுத்தம் செய்யும் போது அதில் இருக்கும் அமிலம் உலோகத்தை சேதப்படுத்தும். இதனால் அவற்றின் மேற்பரப்பில் துளைகள் அல்லது கடினமான புள்ளிகள் ஏற்படும். எனவே வினிகரை கொண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தி போன்ற உலோகப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டாம்.
இதையும் படிங்க: உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை இப்படி க்ளீன் பண்ணி பாருங்க! புதுசு போல் மாறிடும்!
மரப் பொருட்கள்
வினிகரை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் மரப்பொருட்களை சுத்தம் செய்தால், வினிகரில் இருக்கும் அமிலம் மரப் பொருட்களை சேதப்படுத்தும் மற்றும் அதன் பளபளப்பை இழக்கச் செய்யும். எனவே வினிகரை கொண்டு ஒருபோதும் மர சாமான்களை சுத்தம் செய்ய வேண்டாம்.
இதையும் படிங்க: கிட்சன் அலமாரிகளில் உள்ள விடாப்படியான எண்ணெய் பிசுக்கை ஈஸியா சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்!
இரும்பு பாத்திரங்கள்
சமையலறையில் பயன்படுத்தப்படும் இரும்பு பாத்திரங்களை கழுவுவதற்கு வினிகரை பயன்படுத்தினால், அதில் இருக்கும் அமில பண்புகள் இரும்பு பாத்திரங்களில் உள்ள சிறப்பு பூச்சுகளை அகற்றி விடும். இதனால் இரும்பு பாத்திரத்தில் மேற்பரப்பு சேதமாகி, பிறகு அந்த பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு வினிகரை பயன்படுத்த வேண்டாம்.
டிவி
வினிகர் மற்றும் தண்ணீர் கலவையானது வீட்டின் ஜன்னல் மற்றும் பலவற்றை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துவது நல்லது என்றாலும், உங்கள் வீட்டில் இருக்கும் டிவி போன்ற மின்னணு சாதனங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில், வினிகர் மின்னணு சாதனத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தும் மற்றும் அவற்றின் நிறத்தை மாற்றிவிடும். முக்கியமாக அதிகப்படியான ஈரப்பதம் ஷாக் சர்க்யூட்டை ஏற்படுத்திவிடும். இதனால் அவை நிரந்தரமாக சேதம் அடைந்து விடும். எனவே எந்த ஒரு எலக்ட்ரானிக் உபகரணங்களையும் ஈரமான துணியால் சுத்தம் செய்வது அல்லது வினிகர் கொண்டு சுத்தம் செய்வது நல்லதல்ல.
ரப்பர் கேஸ்கட்கள்
கண்ணாடியாலான உலோகப் பொருட்களை சுத்தம் செய்வதற்கு வினிகர் நல்லது. ஆனால் ரப்பர் கேஸ்கட்கள் போன்ற பல பொருட்களை சுத்தம் செய்வதற்கு வினிகர் பயன்படுத்துவது நல்லதல்ல. நீங்கள் அடிக்கடி வினிகரை கொண்டு ரப்பர் குழாய்களை சுத்தம் செய்யும் போது அதனால் ரப்பரில் விரிசலை ஏற்படுத்தும்.