
பொதுவாகவே பண்டிகை நாட்களில் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது வழக்கம். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் தான் ஏற்படும். ஆனால் உண்மையில், நாம் சாப்பிடுவதை தவிர நம்முடைய வாழ்க்கை முறையாலும் வாயு தொல்லை வயிற்று வலி அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதுபோலவே அசிடிட்டி பிரச்சினைகளும் நீடிக்கும். வறுத்த உணவுகள், இனிப்பு பொருட்கள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகத் தொடங்கும். இதனால் அமில தன்மை பிரச்சனை அதிகரிக்கும். எனவே, நீங்கள் அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும், இந்த பிரச்சனைகளை சுலபமாக தவிர்க்கலாம்.
அமிலத்தன்மை ஏற்படுவது ஏன்?
நம் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவே ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கவும் மற்றும் நொதிகளை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. ஆனால் வயிற்றில் இருக்கும் அமலத்தின் அளவு அதிகரித்தால், அமில வீச்சு மற்றும் அல்சர் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக உணவு ஜீரணிப்பது கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க: சாப்பிட்ட உடன் சோடா குடிப்பது செரிமானத்திற்கு உதவுமா? அது நல்லதா? கெட்டதா?
செரிமானத்தை மேம்படுத்த வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:
அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலை தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவை..
1. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.
2. ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு சிறிய அளவில் உணவை சாப்பிடுங்கள்.
3. மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் உணவை சாப்பிட வேண்டும்.
4. இரவில் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. முக்கியமாக சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தூங்க வேண்டாம். இல்லையெனில் அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கும்.
இவற்றையும் பின்பற்றுங்கள்:
ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்
செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற கொஞ்சம் ஆரோக்கியமானதை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களது உணவில் நார் சத்து நிறைந்த உணவை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
செரிமான பிரச்சனையை தவிர்க்க கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காஃபினுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் அமிலம் உருவாகுவதை சுலபமாக தடுக்கலாம். மேலும் தண்ணீர் மூலம் எரிச்சலூட்டும் குடல் நோய் அறிகுறிகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: உங்கள் செரிமான அமைப்பு நல்ல நிலையில் இருக்கிறதா? இதெல்லாம் தான் அறிகுறிகள்!
உணவே நன்றாக மென்று சாப்பிடவும்
நாம் அவசர அவசரமாக உணவு சாப்பிடும் போது வயிற்றில் வாயு சேர தொடங்கும் இது அமிலத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்வதை தவிர உடற்பயிற்சியும் செய்யுங்கள். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் மற்றும் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்