புதிய பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.! எங்கே இருக்கு தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்

First Published | Nov 11, 2024, 8:56 AM IST

பூமி எதிர்காலத்தில் அழியும் அபாயம் இருப்பதாகவும், அதற்கு மாற்றாக மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் புதிய கிரகம் பூமியைப் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தால் பாலைவனத்தில் பனி மழை பெய்கிறது. வெப்பமான காலத்தில் மழை கொட்டுகிறது. நில அதிர்வே ஏற்படாத பகுதிகளில் நில அதிர்வு ஏற்படுகிறது. இதனால் பூமியானது எந்த நேரத்திலும் அழிந்து விடும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் 70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில்  பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் பூமியானது முற்றிலும் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்கள்.

அழிவை எதிர்நோக்கியுள்ளதா பூமி.?

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வின் பின்னர் டைனோசர்கள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக Delhi Mail report-ன் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக (University of Bristol) விஞ்ஞானிகள் ஆய்வின் படி 250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் வெள்ளம், வெப்பம் அதிகரித்து முற்றிலுமாக அழியும் சூழல் ஏற்படும் என கூறுகின்றனர். மேலும்   வெப்பம் மற்றும் வெப்பம் அதிகரிப்பால் அனைத்து உயிரினங்களும் இறக்க நேரிடும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


பரந்து விரிந்த பிரபஞ்சம்

இந்த சூழ்நிலையில் பிரபஞ்சம் மிகவும் விசித்திரமானது. கற்பனைக்கு எட்டாத வகையில் பரந்து விரிந்துள்ளது. பூமி தன்னைத்தானே மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியை சுற்றி பல கோள்கள் உள்ளது.  சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ளநட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் ஏராளமாக உள்ளது. அந்த வகையில் வரும் காலங்களில் பூமி அழியும் நிலை ஏற்பட்டால் புதிதாக மனிதர்கள் வாழக்கூடிய புதிக கிரகம் உள்ளதா என நீண்ட நாட்களாக விஞ்ஞானிகள் ஆராய்சி செய்து வருகிறார்கள்.

புதிய கோள்கள், புதிய கிரகங்கள்

அந்த வகையில் பல பில்லியன், மில்லியன் என பரந்து விரிந்துள்ள இந்த பிரபஞ்சத்தில் பல கோள்கள் இருந்தாலும் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகள் உள்ளதா.? என ஆய்வுகள் தொடர்கிறது. இந்த நிலையில் தற்போது பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூமியைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளை கொண்ட புதிய கிரகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஒளிஆண்டு தூரத்தில் இந்த புதிய கிரகம் அமைந்துள்ளது..

பூமியை போன்ற புதிய கிரகம்

பூமியின் எடையை போன்றே இந்த கிரகத்தின் எடையும்  ஒத்திருப்பதாகத் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கிரகத்தை கெக் தொலைநோக்கி மூலம்இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்திற்கு கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல, 2 மடங்கு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது. 

Lacks iron core

உயிரினங்கள் வாழ வசதிகள்

பூமிக்கு வரும் காலங்களில் ஏதேனும் ஆபத்து நேரிட்டால் மக்கள் இடம்பெயர்வதற்கு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்சியாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த  கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 கிரகத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவையான காற்று, தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் வரும் காலங்களில் இந்த கிரகம் தொடர்பாக புதிய, புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!