ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவை விட தண்ணீர் தான் மிகவும் அவசியம். உணவு இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது. ஒரு மனிதனின் உடலில் 70% நீர் உள்ளது. எலும்புகள், தசைகள் என அனைத்து உறுப்பிலும் தண்ணீர் உள்ளது.
25
Drinking Too Much Water Weight Gain In Tamil
தண்ணீர் செரிமானத்தை பராமரிக்கவும், உடலுக்கு ஆற்றலை மற்றும் குளிர்ச்சியை வழங்குகிறது. சொல்லப்போனால் மனிதனின் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தண்ணீர் தான் மனிதனின் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்ய பெரிதும் உதவுகின்றது.
இந்நிலையில் அதிக அளவு தண்ணீர் குடித்தால் உடல் எடை கூடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இது உண்மையா? என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக உடல் எடை அதிகரிப்பதற்கு கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர, கொழுப்புகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஆனால் தண்ணீரில் கலோரிகள் ஏதுமில்லை. எனவே நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது. சொல்லப்போனால், தண்ணீர் எடையை அதிகரிக்கச் செய்யாது.
ஆனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவை உடலின் உறுப்புகளில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் ஒரு இயற்கையான செயலாகும்.
45
Drinking Too Much Water Weight Gain In Tamil
ஒரு சிலர் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் 2 நாட்களுக்குள் ரொம்பவே பலவீனமடைந்து விடுவார்கள். இதை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களது உடலில் தண்ணீர் பற்றாக்குறை தான். மிக எளிமையான வார்த்தையில் சொன்னால் அவரது உடல் நீரிழப்புக்கு ஆளாகிவிட்டது. எனவே இப்படிப்பட்டவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனையை சுலபமாக தவிர்க்கலாம்.
ஒரு சிலர் அதிக உப்பு சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உப்பு அதிக அளவு தண்ணீரை சேமிக்கும். இதனால் கூட உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த எடையானது தண்ணீரால் கூடியது. ஒருவேளை நீங்கள் உப்பு சாப்பிடுவதை குறைத்தால் அல்லது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை நிறுத்தினால், உங்கள் இது எடை மீண்டும் வரும்.