இந்த சிம்பிள் டிப்ஸ் மட்டும் போதும்; நைட் படுத்த உடனே நல்ல தூக்கம் வரும் - வாங்க பார்க்கலாம்!

First Published | Nov 10, 2024, 11:54 PM IST

Sleeping Issues : மாறி வரும் காலசூழலில் பலருக்கும் இந்த உறக்கம் என்பதே ஒரு எட்டாக்கனியாக மாறிவிட்டது என்றே கூறலாம். ஆனால் ஒரு நாளில் 8 மணிநேர தூக்கம் என்பது மனித உடலுக்கு ரொம்பவும் அவசியம். 

Sleeping

சிலர் கட்டிலில் படுத்த உடனேயே உறங்கி விடுவார்கள். ஆனால் சிலருக்கு அப்படி இல்லை. அவர்கள் தூங்குவதற்கு என்று தொடர்ச்சியாக பல முயற்சிகளை தினமும் எடுக்கப்படுகின்றனர், ஆனாலும் அவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை. ஆனால் உண்மையில் இந்த தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த 3-2-1 என்ற விதி நீங்கள் நன்றாக தூங்க உதவும் என்ற தகவல்  இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சரி அது என்ன விதி? அது எப்படி உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.

தூக்கம்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கத்தின் தரத்திற்கும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு தூக்கமின்மை மூச்சுத்திணறல் ஏற்படும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் நன்றாக தூங்க உதவுவதற்காக இப்பொது 3-2-1 விதி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தூங்குவதற்கு முன் நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதை பொறுத்தது, அது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?

Drinking Syrup

சரி இந்த மூன்று, இரண்டு, ஒன்று விதி என்னவென்று பார்க்கலாம். நீங்கள் உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அனைத்து வகையான மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தான் முதல் விதி, அப்படி நீங்கள் உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்னதாகவே உங்களுடைய இயல்பான மருந்துகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அது உங்கள் உடலுக்குள் சென்று செயல்பட வேண்டிய விஷயங்களை செயல்படுத்தும். நிச்சயம் அது உங்கள் தூக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

Tap to resize

Eating Food

இரண்டாவது நீங்கள் உறங்க செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னதாக உங்கள் இரவு உணவை முடித்திருக்க வேண்டும். நீங்கள் 9:00 மணிக்கு தூங்க செல்பவர் என்றால், கட்டாயம் ஏழு மணிக்குள் உங்களுடைய இரவு உணவை முடித்திருக்க வேண்டும் அப்படி என்றால் தான் அந்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் செரிமான மண்டலங்கள் நன்கு வேலை செய்து, அவையும் நீங்கள் தூங்கும் பொழுது உங்களோடு இணைந்து ஓய்வுக்கு செல்லும். மாறாக நீங்கள் சாப்பிட்டு உடனே தூங்கினால் உங்கள் உடலும் மூளையும் தூங்குமே தவிர உங்களுடைய செரிமான கட்டமைப்பு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்கும். அது உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும்.

drinking water

மூன்றாவது தண்ணீர் மற்றும் பிற பானங்களை நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அருந்துங்கள். அதற்குப் பிறகு அருந்த வேண்டாம், காரணம் அதிகமாக தண்ணீர் குடிப்பதும் அல்லது சூடான டீ, காபி போன்ற விஷயங்களை உறங்க செல்வதற்கு முன் குடிப்பது உங்களுடைய தூக்கத்தை பெரிய அளவில் பாதிக்கும். ஆகவே நீங்கள் உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீர் மற்றும் பிற திரவ ஆகாரங்களை உட்கொள்வது மிகவும் நல்லது. இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே உங்களுடைய தூக்கம் மிகச்சரிப்பாக அமையும்.

இரவில் தயிர் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள்

Latest Videos

click me!