ஒரு மணி நேரத்தில் எவ்வளவு குடிக்கலாம்?
உங்களது உடலில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்காமல் இருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிளாஸ் மட்டுமே குடிப்பது நல்லது. அப்படி மீறி குடித்தால் அது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
அதுபோல ஒருவர் தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குடித்தால் விபத்துகள், உடல் உபாதைகள் அல்லது ஹாங்கோபர் போன்றவற்றை சந்திக்க நேரிடும். முக்கியமாக தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் இதயம், புற்றுநோய், கல்லீரல், சீரகம் அல்லது மூளை தொடர்பான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
வெறும் வயிற்றில் மது அருந்தாதே
நீங்கள் ஒவ்வொரு முறையும் குடித்த பிறகு ஆல்கஹால் ஆனது உங்களது வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக ரத்த ஓட்டத்தில் செல்கிறது. எனவே நீங்கள் மது அருந்த தொடங்கும் போதெல்லாம் உங்களது வயது காலியாக இருந்தால் ஆல்கஹால் ரத்த ஓட்டத்தில் வேகமாக செல்லும். இதனால் உங்களது உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படும். எனவே குடிப்பதற்கும் முன் ஏதாவது கண்டிப்பாக சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள் மற்றும் உப்பு தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். நட்ஸ்கள், சாலட், வேர்கடலை, பாலாடைக் கட்டி போன்றவற்றை மதுவுடன் அல்லது அதற்கு முன் சாப்பிடலாம்.