இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலானோர் பாலுடன் மருந்து எடுத்து கொள்வதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் ஜூஸ், குளிர்பானங்களுடன் மருந்து எடுத்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கும் மருந்தை பாலுடன் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்வது சரியா? எல்லா மருந்துகளையும் பாலுடன் சேர்த்து சாப்பிடலாமா? அது நல்லதா என்பதை இங்கு காணலாம்.
நாம் அன்றாடம் அருந்தும் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. கால்சியம் பல மருந்துகளின் ஆற்றலை குறைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இங்கு எந்த மருந்துகளுடன் பால் அருந்தக் கூடாது என்பதை காணலாம். பாலுடன் மருந்து உட்கொள்வதை வயதானவர்கள் அதிகம் செய்கிறார்கள். குழந்தைகளுக்கும் அதை பழக்குகிறார்கள். பால் போன்ற பானங்களோடு மருந்து உட்கொள்ளும்போது மருந்தின் வினையாற்றும் விளைவைக் குறைக்கும் என ஜெர்மன் மருந்தாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உர்சுலா செலர்பெர்க் கூறியுள்ளார்.
பாலில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் மருந்து கலப்பதைத் தடுக்கிறது. அதனால் மருந்தின் உட்கொள்வதிம் தாக்கம் குறையும். ஆகவே பெரும்பாலான மருத்துவர்கள் பாலுடன் மருந்து உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.
பழச்சாறுடன் மருந்தை எடுத்து கொண்டால் உங்களுக்கு சுத்தமாக பயனளிக்காது. ஜெர்மன் மருந்தாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உர்சுலா செலர்பெர்க், பழச்சாறு நம் உடலைச் சென்றடைந்தவுடன், அது மருந்தை உடலில் கரைக்க உதவும் என்சைம்களைத் தடுக்கிறது. இதனால் மருந்தின் வேலை செய்வது குறையும். அதனால்தான் மருந்து உட்கொள்ளும் போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீருடன் மட்டுமே எடுக்க வேண்டும். பால், ஜூஸ் ஆகியவற்றுடன் உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: திடீர்னு லோ சுகர் ஆச்சுன்னா என்ன செய்யணும்.. சாக்லேட் சாப்பிட்டால் நல்லதா?