International Friendship Day 2022:
நட்பு என்பது அன்பின் மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. நம் முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டி பெற்றோர்கள் என்றால், இரண்டாவது படிக்கட்டு நண்பர்கள்தான். அத்தகைய நண்பர்களை பெருமைபடுத்தும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க..Cholesterol: கொலஸ்ட்ராலை டக்குனு கரைக்க சூப்பர் வீட்டு வைத்தியம்...மிஸ் பண்ணீடாதீங்க...
International Friendship Day 2022:
நட்புக்காக தொடங்கி நண்பன் வரை பல திரைப்படங்கள் பல படங்கள் அனைத்து காலக்கட்டங்களில் வெளியாகி நட்பின் சிறப்பை எடுத்துரைக்கிறது. ''முஸ்தப்பா முஸ்தப்பா மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’ என்ற வார்த்தைக்குள் எத்தனை உண்மை இருக்கிறது.''ஃப்ரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு''. அந்தளவுக்கு ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது இந்த நண்பர்கள் தான்.
International Friendship Day 2022:
வாழ்வில் எந்த சூழலிலும் பாசிட்டிவாக இருக்க ஒரே ஒரு சிறந்த நண்பர் இருந்தால் கூட போதும். நம்மை மற்றும் நம் சூழ்நிலையை புரிந்து கொள்ள நண்பர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். அதனால்தான் நண்பர்கள் நமக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரமாக இருக்கிறார்கள். இந்த அழகான உறவின் முக்கியத்துவத்தை பற்றி சாக்ரடீஸ் போன்ற மேதைகளின் கூற்று என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
International Friendship Day 2022:
1. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூற்றுப்படி, ஒரு புத்தகம் என்பது 100 நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால், ஒரு நல்ல நண்பன் என்பவன்... ஒரு நூலகத்திற்கே சமமானவன்.
மேலும் படிக்க..Cholesterol: கொலஸ்ட்ராலை டக்குனு கரைக்க சூப்பர் வீட்டு வைத்தியம்...மிஸ் பண்ணீடாதீங்க...
2. கஸாலி என்ற மாமேதை, நட்பினை மூன்று வகையாக பிரிக்கிறார். முதலாவது வகை நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. இரண்டாவது வகை நட்பு மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு எப்போதாவது தேவை. மூன்றாவது வகை நட்பு நோயை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவையில்லை என்கிறார்.
International Friendship Day 2022:
சாக்ரடீஸ், ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். அந்த வீட்டை பார்த்த நபர் உங்களுக்கு இந்த சிறிய வீடு இதுபோதுமா?' என்று கேட்டுள்ளார். உடனே தத்துவ அறிஞர் சாக்ரடீஸ், இந்த சிறிய வீட்டை நிரப்புவதற்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்றாராம்.
அதுமட்டுமின்று, உலக புகழ் பெட்ரா யங் என்ற அறிஞர் கூற்றுப்படி, ''நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,'' என கூறுகிறார்.