ஜோதிடத்தின் பார்வையில், ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒவ்வொரு மாதத்தில் ராசியை மாற்றியுள்ளன. இதன் பலன் பல ராசிகளில் காணப்பட்டது. அந்த வகையில் செவ்வாய் கிரகம் வருகிற ஆகஸ்ட் 10, 2022 அன்று இரவு 9:32 மணிக்கு ரிஷப ராசியில் பயணிக்கிறார். செவ்வாய் பெயர்ச்சியால் பல ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது. அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராசி மாற்றத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க ..Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள்.வாழ்வில் செல்வ வளர்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்படும். நீண்ட நாட்களாக கடனில் இருந்தால் அதிலிருந்தும் விடுபடுவீர்கள்.வியாபாரத்திலும் லாபம் இருக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக அமையும்.