நம்மில் பலருக்கு எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை தெரியாது. இதன் காரணமாக உணவு உண்ட பிறகும் விரும்பும் வெவ்வேறு உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்த விழிப்புணர்வுகளை அனைவரும் பெற்றிருப்பது அவசியம். எனவே, நாம் இது குறித்து முழு தகவல்கள் தெரிந்து வைத்து கொள்வோம்.
உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக மாம்பழம் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளவே கூடாது. இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. அது மட்டுமின்றி, பழங்களில் உள்ள சத்துக்களின் முழுப் பலனையும் உங்கள் உடலும் பெறாது. எனவே, ஒருவர் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும்.
காபி அல்லது டீயில் இருக்கும் நிகோட்டின் ரத்த சிவப்பணுக்களின் அளவைக் குறைக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான புரதம் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டீ சாப்பிடும்போது, நிக்கோடின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைக்கும் எதிர்மறை செயலில் ஈடுபடும். இது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. எனவே, சாப்பிட்டவுடன் டீ காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
44
துரித உணவுகள்:
துரித உணவுகளான எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு பிறகு கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மலசிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.