சில வீடுகளில் மண்ணெண்ணெய், பெட்ரோல், பெயிண்ட், தின்னர் போன்ற ரசாயனப் பொருட்கள் மிச்சமிருந்தால், அதை பிளாஸ்டிக் கேன் அல்லது பாட்டிலில் சேமித்து வைப்பார்கள். ஆனால் அது ரொம்பவே ஆபத்து. ஏனெனில் இந்த ரசாயனங்கள் பிளாஸ்டிக்கை அரித்து கசிவை ஏற்படுத்தும். இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பூச்சிக்கொல்லிகள் மருந்துகள்:
பிளாஸ்டிக் டப்பாக்களில் பூச்சிக்கொல்லிகள் போன்ற சில வகையான ரசாயன மருந்துகளை வைக்கக் கூடாது. ஏனெனில் இவை பிளாஸ்டிக்கோடு வினைபுரிந்து டப்பாவை பலவீனப்படுத்திவிடும். இதனால் நச்சு வாயுக்கள் உருவாகும். ஒருவேளை அவற்றை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைத்தால் அதை குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் எட்டாத வகையில் உயரத்தில் வையுங்கள்.