Snoring Problem: குறட்டை விடுவதால் இவ்வளவு ஆபத்துகளா..? உஷார் மக்களே..நிபுணர்கள் கூறும் அட்வைஸ்..

First Published Sep 14, 2022, 12:55 PM IST

How to stop snoring home remedies in tamil: தூக்கத்தில் குறட்டை விடுவதை யாரும் பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உடல் நலக் குறைபாட்டின் அறிகுறிதான் குறட்டை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை சப்தம் ஏற்படுகிறது. குறட்டை விடுவது ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல அறிகுறி அல்ல. மேலும், ஒருவர் விடும் குறட்டை, அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தைக் கொடுக்கிறது. உண்மையில், மக்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து விடுபட பல்வேறு வகையான முயற்சிகளைச் செய்கிறார்கள், எனவே, குறட்டையை எப்படியாவது போக்கி விட வேண்டுமென்று பலரும் பல சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.  

மேலும் படிக்க..இந்த ஒரே ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான் பல்லி, எறும்பின் அழுக்கை போக்கி , நறுமணம் வீசும்

 யாருக்கு சிகிக்சை அவசியம்..?

களைப்பினால், ஒருவருக்கு குறட்டை வருவது இயல்பு, ஆனால் அதுவே மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, நீண்ட நாள் குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். லேசான குறட்டையை மருத்துகளில்  சரி செய்தாலும், அதிகபட்சமாக அறுவை சிகிக்சை வரை தேவைப்படலாம்.
 

குறட்டையை விரட்ட சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்:

தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும். 

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக ஓரிரு பூண்டு பற்களை சாப்பிட்டு, அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க..இந்த ஒரே ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான் பல்லி, எறும்பின் அழுக்கை போக்கி , நறுமணம் வீசும்

ஒரு கப் கொதிக்கும் நீரில் 10 புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உங்கள் குறட்டையில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

snoring

தூங்குவதற்கு முன், சில துளிகள் பைப்பர்மிண்ட் எண்ணெயை தண்ணீரில் கலந்து, இதை கொண்டு வாயை கொப்பளிக்கவும். 

ஒரு கிளாஸ் மந்தமான தண்ணீரில் இலவங்கப்பட்டைப் பொடியை கலந்து குடிக்கவும். இதன் மூலமும் உங்கள் குறட்டையில் இருந்து நிவாரணம் பெறுவீர்.

அதேபோன்று, இரவில் தூங்கச் செல்லும் முன் புகைபிடித்தல் மற்றும் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் படிக்க..இந்த ஒரே ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான் பல்லி, எறும்பின் அழுக்கை போக்கி , நறுமணம் வீசும்

click me!