Hindi Diwas 2022: ஹிந்தி மொழியைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய.. சுவாரஸ்யமான வரலாற்று உண்மைகள்..

First Published Sep 14, 2022, 10:42 AM IST

Hindi Diwas 2022: இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 கொண்டாடப்படுகிறது. 

இந்தி மொழி பேசும் மக்களால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய் மொழியாக உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தி, இது தேவானகிரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தி ஒரு மொழி மட்டுமல்ல, 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் தேசிய அடையாளமாகும். ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் மொழிகளுக்குப் பிறகு உலகில் நான்காவது இடத்தில் ஹிந்தி மொழி உள்ளது. இந்தியப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய மொழி இந்தி, அதனால்தான் அதன் பங்களிப்பை நாம் மறக்கக்கூடாது.

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

செப்டம்பர் 14, 1950 அன்று இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மாறியது. அரசியலமைப்பின் 343 வது பிரிவின் படி, "யூனியனின் அதிகாரப்பூர்வ மொழி தேவநாகரி எழுத்தில் இந்தி இருக்க வேண்டும்". அப்போதிருந்து, இந்தியாவில் செப்டம்பர் 14 இந்தி திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

இந்தி மொழியைப் பற்றிய சுவாரஸ்யமான  5 உண்மைகள்:

1. இந்தியாவின் முதல் மாநிலமாக பீகார், 1881 இல் உருது மொழிக்குப் பதிலாக ஹிந்தியை தனது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக மாற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இந்தி ஆனது.

2. மாண்டரின், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு உலகில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாக இந்தி உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, மொரிஷியஸ், பிஜி, சுரினாம், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தி பேசப்படுகிறது.

3. ஹிந்தி எழுத்துக்கள் தனித்துவமான இனிமையான ஒலியைக் கொண்டுள்ளன.

4. 'சிந்து நதியின் நிலம்' என்று பொருள்படும் ஹிந்த் என்ற பாரசீக வார்த்தையிலிருந்து இந்தி அதன் பெயரைப் பெற்றது.

5. இந்தி மொழி தொடர்பான விதிமுறைகள் மத்திய ஹிந்தி இயக்குநரகம், இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஹிந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14, 1949 அன்று தேசிய அரசியலமைப்பால் இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக மாறியது. 
 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, செப்டம்பர் 14 ஆம் தேதியை இந்தி திவாஸ் என்று கொண்டாட முடிவு செய்தார். மேலும், தேவநாகரி எழுத்துக்களில் இந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த பியோஹர் ராஜேந்திர சிம்ஹாவின் பிறந்த நாளான (செப்டம்பர் 14, 1916) இன்று இந்தி திவாஸ் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலக இந்தி தினம்:

உலக இந்தி தினம் ஜனவரி 10 அன்று சர்வதேச அளவில் மொழியை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்பு சபை இந்தியை செப்டம்பர் 14 ஆம் தேதி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்த நாளில் இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக இந்தி திவாஸ் நாளில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்று, மத்திய, மாநில அரசுகளும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. தவிர, இந்திய தூதரகங்கள் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளை நடத்துகின்றன.

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

click me!