வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

First Published | Sep 14, 2022, 9:41 AM IST

Erumbu Vellam Pariharam in Tamil: எறும்புக்கு இந்த ஒரு பொருளை தானம் கொடுத்தால் என்னென்ன? பலன்கள் கிடைக்கும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் ஆன்மீக தகவலாக அறிந்து கொள்ள போகிறோம்.
 

Vastu tips for home:

ஒருவருடைய வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் இல்லை என்று அர்த்தம். ஏனெனில், ஒருவரது வீட்டில் மகாலட்சுமி வந்து தங்கிவிட்டால், வறுமை, தனிமை, பீடை போன்றவை தலைதெறிக்க ஓடும். செல்வமும், பொன்னும் பொருளும் வந்து சேரும்.  இத்தகைய தரித்திரம் நீங்கி உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் இன்றி செல்வ மழை பொழிய எறும்புக்கு இந்த ஒரு பொருளை கொடுத்து பாருங்கள். வீட்டிற்கு எண்ணற்ற நன்மைகள் வந்து சேரும். அப்படி என்னென்ன? பலன்கள் என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் ஆன்மீக தகவலாக அறிந்து கொள்ள போகிறோம்.

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளின் புழக்கம் வீட்டில் எப்போதும் இருந்தால் போதும்.உங்களை பிடித்த பீடை விலகும், ஐஸ்வரியம் பெருகும்

gold smuggling ants

முதலில், இது போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள்  தர்ம காரியங்களோ, கோவில் புண்ணிய காரியங்களுக்கோ, ஏதாவது நன்கொடை தருவது போன்ற செயல்களை செய்யலாம். அப்படி கொடுக்க முடியாத வறுமை நிலையில் இருப்பவர்கள், வறுமை நிலையில் இருப்பவர்கள் இந்த ஒரு தானம் செய்யுங்கள்.

Tap to resize

Vastu tips for home:

ஏனெனில், தானம் என்பது மனிதனுக்கு மனிதன் கொடுத்து கொள்வது மட்டுமல்ல, நாம் வாழும் பூமியில் வாய் பேச முடியாத எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் கண்ணுக்குத் தெரிபவை, தெரியாதவை, என்று இறைவன் படைப்பில் அத்தனை உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவை.

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளின் புழக்கம் வீட்டில் எப்போதும் இருந்தால் போதும்.உங்களை பிடித்த பீடை விலகும், ஐஸ்வரியம் பெருகும்

Vastu tips for home:

அப்படி உள்ள கண்ணுக்கு தெரியாத சிறு, சிறு உயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு நீங்கள் இந்த வெல்ல தானத்தை செய்தாலே போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீரில் கரையும் வெல்லம் போல் கரைந்து காணாமல் போய்விடும். இதற்காக நீங்கள் பெரிதாக எந்த ஒரு பூஜையும் செய்ய வேண்டியதில்லை. இது மிக மிக எளிமையான ஒரு பரிகாரம் தான்.
 

Vastu tips for home:

உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே  தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பு, வலது புறமாக நின்று இறைவனை மனதில் நினைத்து கொண்டு, சிறிதளவு வெல்லத்தை தூவி விட்டு செல்லுங்கள். அதன்பிறகு மறுநாள் காலை தான் நிலக்கதவை திறக்க வேண்டும். இப்படி செய்தால், கண்டிப்பாக காலையில் நீங்கள் பார்க்கும் போது எறும்பு அல்லது ஏதாவது ஒரு உயிரினம் நீங்கள் இட்ட இந்த வெல்லத்தை நிச்சயம் உண்டு தன்னுடைய பசியை போக்கி இருக்கும். 

Vastu tips for home:

அதேபோன்று,நீங்கள் கோவில்களுக்கு செல்லும்போதும் கையில் கொஞ்சம் வெல்லத்தை எடுத்து, கோவில் பிரகாரத்தில் எங்காவது ஒரு மூலையில் வைத்து விட்டு வாருங்கள். ஏனெனில் கோவிலில் இருக்கும் எறும்பு போன்ற சிறு சிறு உயிர்கள் இது போன்று நாம் இடும் உணவை நம்பி தான் உயிர் வாழ்கின்றன.அப்படி இல்லை என்றால் காலையில் நீங்கள் எழுந்துவாசல் தெளித்து கோலம் போடும் போது,அரிசி மாவில் கோலமிடுங்கள் இதனால் எறும்பு போன்ற சின்ன சின்ன உயிரினங்கள் பயனடையும். 

Vastu tips for home:

இதை தினமும் செய்தால் நல்லது, அல்லது வாரத்திற்கு இரண்டு முறை, முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் இதுபோன்று செய்து வாருங்கள். அப்படி செய்தால், எறும்புகள் தான் உண்ணும் உணவை இட்டவர் யாரோ அவருக்காக ஒரு நிமிடம் இறைவனை நோக்கி தவம் செய்யும் என்கிற ஒரு ஐதீகம் உண்டு. இதன் மூலம், உங்களின் வாழ்வு வளம் பெரும். தீராத பிரச்சனைகள் தீரும். உங்கள் கஷ்டங்கள் விலகி செல்வம் கொழிக்கும். 

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளின் புழக்கம் வீட்டில் எப்போதும் இருந்தால் போதும்.உங்களை பிடித்த பீடை விலகும், ஐஸ்வரியம் பெருகும்

Latest Videos

click me!