இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

First Published | Sep 14, 2022, 11:58 AM IST

Mopping tips in Tamil: வீட்டை கரப்பான், எறும்பு, பல்லி பூச்சிகளிடமிருந்து பாதுகாப்புடன் பளபளன்னு அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பு உதவியாக இருக்கும். 

உங்க வீட்டு தரை எப்போதும் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும், குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எறும்பு, ஈ , கரப்பான், கொசு ஆகியவற்றின் எச்சத்தில் இருந்து ஆரோக்கியமாக வளர வேண்டியது அவசியம். அதேபோன்று சில நாள்பட்ட கறைகள் தரையில் ஒட்டி கொண்டால், வீட்டில் அழகையே கெடுத்து விடும்.என்னதான் நாம் துடைத்தாலும், நம்மை விட்டு நீங்கவே நீங்காது.  எனவே, நாள்பட்ட கறைகள் நீங்கி அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை இறுதிவரை படித்து பலன் பெறலாம்.


முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, ஆப்ப சோடா 1 டீஸ்புன், பல் தேய்க்கும் பேஸ்ட் 1/2 டீஸ்புன் சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.இப்போது  நமக்கு தேவையான லிக்விட் தயார். இந்த லிக்விடை உங்களுடைய டயல்ஸில் எங்கு எல்லாம் கறை இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் தெளித்து விட வேண்டும்.

மேலும் படிக்க..சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

Tap to resize

டைல்ஸ் முழுவதும் தெளித்துவிட்டால் கூட தவறு கிடையாது. பிறகு ஒரு மாப் எடுத்து வந்து கறை இருக்கும் இடத்தில்  துடைத்து வரும்போது, தரையில் இருக்கும் அந்த கறைகளும் சுத்தமாக நீங்கிவிடும். குறிப்பாக நாள்பட்ட விடாப்பிடியான கறை, சாப்பிட்டு கறை போன்றவை எல்லாம் சுலபமாக நீங்கி விடும். 

அடுத்தபடியாக நம் வீட்டை சுத்தமாக துடைக்க வேண்டும். எப்போதும் போல அரை பக்கெட் அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, டெட்டால் 1 மூடி, ஷாம்பூ 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு தேவை என்றால் வீடு துடைக்கும் லிக்விட் ஏதாவது ஒன்றை சேர்த்து எப்போதும் போல வீட்டை துடைத்து விட்டால் போதும் உங்கள் வீடு பளிச் பளிச்சென வாசமாக மாறிவிடும்.

மேலும் படிக்க..சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

வீடு துடைக்கும் போது ஃபேன் போடக்கூடாது. பேன் போட்டால் வீடு துடைத்த அடையாளம் பட்டை பட்டையாக ஆங்காங்கே தெரியும். எனவே, மாப் போட்டு சிறிது நேரம் கழித்து ஃபேன் போட்டு விடுங்கள். அப்படி செய்தால், நீண்ட நாட்களுக்கு அழுக்கு உங்களுடைய டயசில் ஒட்டி பிடிக்காமல் கறை பிடிக்காமல் புத்தம் புதியதாகவே இருக்கும். வீடு துடைத்து ஒரு வாரம் ஆனாலும் வீட்டில் நிறைய அழுக்கு வந்து சேராது.  

இறுதியாக வேப்ப இலை, தண்ணீரில்  பேக்கிங் சோடா கலந்து உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்துவிட்டு மாப் போட்டு விட்டால் உங்களுடைய டைல்ஸ் பார்ப்பதற்கு பளிங்குகள் போல ஜொலிக்கும். மேலும், எறும்பு, கொசு, ஈ, கரப்பான் போன்ற பூச்சிகளின் தொல்லையும் இருக்கவே இருக்காது. 

மேலும் படிக்க..சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

Latest Videos

click me!