தூக்க சுற்றுலா அதாவது ஸ்லீப் டூரிசம் (Sleep Tourism) என்ற சுற்றுலா சமீப காலமாக மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஸ்லீப், 'நாப்கேஷன்ஸ்' அல்லது 'நாப் ஹாலிடேஸ்' என்றும் அறியப்படுகிறது, இது ஒரு வகையான சுற்றுலா ஆகும். பொதுவாக புதுப்புது இடங்களை சுற்றி பார்க்கவே பலரும் சுற்றுலா செல்கின்றனர்..
ஆனால் இந்த தூக்க சுற்றுலாவில் சரியான தூக்கம், ஓய்வு மற்றும் ரீசார்ஜ் செய்ய பயணம் செய்கிறார்கள். இந்த ஸ்லீப் டூரிசம் போதுமான தூக்கத்தை வழங்குவதுடன், அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது.
தூக்க சுற்றுலா என்றால் என்ன?
இந்த தூக்க சுற்றுலாவில் யோகா, நீச்சல், ஸ்பா சிகிச்சைகள், பார்லர் அமர்வுகள் மற்றும் சில ஆரோக்கியமான உணவு விருப்பங்களுடன் சில கூடுதல் சலுகைகளுடன் மணிநேர தூக்கமும் அடங்கும். இந்த வகையான பயணம் உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடினமாக வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் தூக்க சுற்றுலாவின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.