அரிசிக்குள் வண்டுகள், பூச்சிகள் வருவதை தடுக்க 4 'நச்' டிப்ஸ்!! 

First Published | Sep 10, 2024, 4:15 PM IST

Tips For Storing Rice : அரிசிக்குள் பூச்சிகள் வருவதை தடுப்பது சவாலான காரியம். ஆனால் முடியாத காரியமல்ல. இந்த பதிவில் அரிசிக்குள் பூச்சி வராமல் தடுப்பதை குறித்து காணலாம். 

இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி தான் பிரதான உணவு. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது அரிசி உணவு சாப்பிடாவிட்டால் பெரும்பாலானோரால் நிம்மதியாக இருக்க முடியாது.  ஏனென்றால் இட்லி, தோசை, சோறு என அரிசியை காலை உணவு முதல் இரவு உணவு வரை இந்தியர்கள் எடுத்து கொள்கின்றனர். ஆனால் அரிசியை சுத்தம் செய்வது எளிய பணி அல்ல. கொஞ்சம் பொறுமை வேண்டும். அதை விட முக்கியம் அதை சேமித்து வைக்கும் போது பூச்சிகள் அதனுள் வராமல் தடுப்பதாகும். 

அரிசி மொத்தமாக வாங்கி நீண்ட நாள் பயன்பாட்டுக்காக வைக்கும் போது சில நாட்களில் அதில் பூச்சிகள் வருவதை பார்க்க முடியும். அந்த பூச்சிகளை வெளியேற்றி அதை சுத்தப்படுத்தி பின்னர் சமைப்பது ஒவ்வொரு நாளும் பெரிய வேலையாகவே இருக்கும். 

ஏற்கனவே அரிசி விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது.  இதற்கிடையில் அரிசியில் பூச்சிகள் வருவது பெரிய தலைவலி. பூச்சிகள் வந்த காரணத்தால் அதை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நமக்கு தான் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதை தவிர்த்து அரிசிக்குள் பூச்சி வராமல் பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும், ஒருவேளை பூச்சிகள் வந்து விட்டால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  தேங்காயை இப்படி சேமிங்க.. 6 மாசமானாலும் கெட்டுப்போகாது.. ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களுக்கும் டிப்ஸ் இருக்கு!

Tap to resize

அரிசிக்குள் பூச்சி வராமல் இருக்க டிப்ஸ்: 

வெயிலில் வைங்க! 

அரிசிக்குள் பூச்சிகள் இருக்கும் போது அதனை சமைப்பது நல்லதல்ல. பூச்சிகள் அரிசியில் நெளிவது  காண்பதற்கு அருவருப்பாகவும் இருக்கும்.  ஆனால் வெயிலில் அரிசியை வைப்பதால் பூச்சிகளை விரட்ட முடியும். வெயிலில் வைத்த கொஞ்ச நேரத்தில் பூச்சிகள் அரிசியை விட்டு வெளியேறிவிடும். ஆனால் இது தற்காலிக தீர்வு தான் என்றாலும் உடனடி பலன் கிடைக்கும். ஒருவேளை பூச்சிகள் ஏற்கனவே இறந்து காணப்பட்டால் அதனை அரிசி கழுவும் போது நீக்கிவிடலாம்

வேப்பிலைகள்: 

வேப்பிலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து பயன்படுத்தும் பல நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இவை மருத்துவ பலன்கள் மட்டுமல்லாமல் அரிசியை பாதுகாக்கவும் பயன்படும். இதனை அரிசியில் வைத்தால் அந்த வாசனைக்கு பூச்சிகள் வராது. ஒருவேளை ஏற்கனே பூச்சிகள் வந்துவிட்டால், அதில் வேப்பிலைகளை வைத்து வெயிலில் வையுங்கள். வெயிலில் பூச்சிகள் அரிசியை விட்டு வெளியேறிவிடும்.   

காற்றுபுகாத கொள்கலன்கள்: 

பூச்சிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள பொருள்களிலே தங்கும்.  அதனால் அரிசியை சேமித்து வைக்கும் போது காற்றுபுகாத  கொள்கலன்களில் சேமித்து வைக்க வேண்டும். இதனால்  பூச்சிகளை தடுக்க முடியும். 

வத்தல்: 

அரிசியில் வத்தல் (காய்ந்த மிளகாய்) வைப்பதால் பூச்சிகள் வருவதை தடுக்கலாம். ஆனால் நல்ல தரமான வத்தலாக இருக்க வேண்டும். பண்டைய காலங்களில் இந்த முறையை பின்பற்றியுள்ளார்கள். 

கிராம்பு: 

சேமித்து வைத்துள்ள அரிசியில் 8 முதல் 9 கிராம்புகளை போட வேண்டும். இதனை வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்கலாம். கிராம்பின்  வாசனையானது பூச்சிகளை அரிசிக்குள் வரவிடாது. ஏனெனில் அந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. கிராம்பு மட்டுமல்லாமல் பூண்டும் பூச்சிகளை விரட்டும். அரிசிக்குள் பூண்டு வைப்பதால் பூச்சிகள் அரிசிக்குள் வராது.  

இதையும் படிங்க:  கரப்பான் பூச்சிகள் உங்க வீட்டிலிருந்து தலைத் தெறிக்க ஓட.. ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!

தீப்பெட்டி: 

தீப்பெட்டியை வைத்து அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். அரிசியை சேமித்துள்ள சாக்கு அல்லது வாளிகளில் தீப்பெட்டியை வைத்து விடுங்கள். தீப்பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் கந்தகம் பூச்சிகளை அரிசிக்குள் வராமல் தடுக்கிறது. அரிசியை சமைப்பதற்கு எடுக்கும் போது அதனை வெந்நீரில் நன்கு கழுவி பயன்படுத்தினால் தீப்பெட்டியில் உள்ள கந்தகத்தின் எந்த தாக்கமும் அரிசியில் இருக்காது. பூச்சியின் தொல்லையும் இருக்காது. 

பிரியாணி இலை: 

பிரியாணி இலை சமையலுக்கு மட்டுமல்ல, அரிசியில் உள்ள பூச்சிகளை விரட்டவும் நமக்கு உதவுகிறது. இதில் இருக்கும் வாசனை மனிதர்களுக்கு பிடித்தாலும் பூச்சிகளுக்கு பிடிப்பதில்லை. பூச்சிகள் கிராம்பு, பிரியாணி இலை உள்ளிட்டவைகளில் வாசனையை விரும்புவதில்லை. அரிசிக்குள் பூச்சிகள் வராமல் இருக்க சில பிரியாணி இலைகளை எடுத்து துண்டுகளாக நறுக்கி அரிசி வைத்திருக்கும் கொள்கலனில் வைத்தால் பூச்சிகள் வராது.

Latest Videos

click me!