
அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கிறது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் எப்பவும் வேலை மேலயே கவனமா இருக்க முடியுமா என்ன? ஆனால், சிலர் அதிக வேலை காரணமாக மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள்.. சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல் கூட சிலர் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பார்கள். இது ஓரிரு நாட்கள் நடந்தால் எந்த எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், அடிக்கடி இப்படிச் செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். மதியம் சாப்பிடாம இருந்தா என்ன ஆகும் என்று பார்க்கலாம்.
ஆற்றல் குறையும்.
நீங்கள் தினமும் மதியம் சரியான நேரத்திற்கு சாப்பிட்டால் தான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அப்போது தான் நீங்க தினசரி வேலைகளை செய்வதில் கவனம் செலுத்த முடியும். ஆனால், வேலை அதிகமாக உள்ளது என்று கூறி சாப்பிடாமல் இருந்தால் அடிக்கடி பசி, தலைசுற்றல், சோர்வு, மனநிலையில் மாற்றங்கள் என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது உங்க வேலைத் திறனையும் அதிகமாக பாதிக்கும். அதனால மதியம் எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட மறந்துடாதீங்க.
வேலையில் கவனம் சிதறும்:
நீங்கள் சாப்பிடும் சாப்பாடுதான் மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்குது. அப்போது தான் உங்க மூளை நன்றாக வேலை செய்யும். ஆனா, நீங்கள் மதியம் சாப்பிடாம இருந்தால், மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. இதனால நீங்க சரியா வேலை செய்ய முடியாது. கஷ்டமான வேலைகளைச் செய்யும்போது இன்னும் கூடுதல் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
ஹைப்போகிளைசீமியா:
ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் நீங்கள் மதியம் சாப்பிடாம இருந்தால், ஹைப்போகிளைசீமியா பிரச்சனை வர வாய்ப்பு அதிகம். இதனால உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து இது சர்க்கரை நோய் உள்ளவங்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிக்கும்.
எடை அதிகரிக்கும்.
சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், நீங்கள் சாப்பிடாம இருந்தாதான் எடை அதிகமாகும். ஏனெனில், நீங்க ஒரு வேளை சாப்பாட்டைத் தவிர்த்தால், அடுத்த வேளை அதிகமாக பசிக்கும். இதனால நீங்க எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவீர்கள். இது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.
செரிமானப் பிரச்சினைகள் வரும்:
நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் சரியாக கிடைக்கும். சத்துக்கள் உங்க உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்பவே முக்கியம். ஆனா, நீங்க மதியம் சாப்பிடாமல் இருந்தால், வாயுத் தொல்லை, அசிடிட்டி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல்னு பல செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில், தினமும் மதியம் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம்.
மதியம் என்னென்ன சாப்பிடலாம்?
சத்தான உணவுகள்:
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் மதிய உணவில் பழங்கள் காய்கறிகள், தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது அவசியம். இதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
நீர்ச்சத்து அவசியம்:
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்காக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் சோர்வு, தலைவலி மாதிரியான பிரச்சினைகள் வராது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தான் இது மாதிரி பிரச்சினைகள் வரும்.
சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
சிலர் சாப்பிடும் போது கூட வேலை செய்வார்கள். ஆனால், இப்படிச் செய்யவே கூடாது. சாப்பிடும் போது வேலையை பற்றி யோசிக்காமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தி, உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அப்போது உணவும் நன்றாக செரிமானம் ஆகும்.
ஆரோக்கியமான சிற்றுண்டிகள் :
சாப்பிட்ட பிறகு இடையே பசி எடுக்கும் ஆரோக்கியமற்ற திண்பண்டங்களுக்கு பதில், பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தவறாமல் சாப்பிடுங்கள்.