Teeth Whitening Tips : சிலர் எவ்வளவு நேரம் பல் துலக்கினாலும் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை மட்டும் போகாது. முத்து போன்ற பற்களை பெற அவர்கள் பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைப்பதில்லை. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும் பற்கள் வெள்ளையாவது உறுதி.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிரிக்கும் போது பற்கள் வெள்ளையாக இருப்பதுதான் அழகு. ஏனெனில் நாம் சிரிக்கும் போது நமக்கு எதிர் நிற்கும் நபரின் கண்ணில் படுவது நம்முடைய பற்கள் தான். இதனால்தான் பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாகவும், கறைபடிந்தும் காணப்படும். இதனால் அவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாமல் போகின்றது
26
Teeth Whitening Tips In Tamil
பற்களை சரியாக துலக்காமல் இருப்பது, சில பொருட்களை உண்பது போன்றவற்றால் பற்களில் அழுக்கு சேர்ந்து விடும். இதனால் பற்கள் மஞ்சள் நிறமாகவும், பச்சை நிறமாகவும் மாறிவிடும்.
இந்த மாதிரியான பற்களை வெண்மையாக்க பலரும் சந்தையில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றாலும் எந்த ஒரு பயனும் இருக்காது. ஆனால் சிலவற்றைப் பயன்படுத்தினால் உங்கள் பற்கள் நிச்சயமாக பளிச்சென்று வெண்மையாகும். அவை என்னென்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
36
Teeth Whitening Tips In Tamil
எலுமிச்சை சாறு, உப்பு
எலுமிச்சை சாற்றை பலரும் உடல் எடையை குறைக்க அதிகமாக குடிப்பார்கள். அதுபோல இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்கலாம்.
இதற்கு நீங்கள் காலை வேளையில் பல் துலக்கிய பிறகு எலுமிச்சை சாற்றில் சிறிதளவு உப்பு சேர்த்து பற்களில் நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் குறையும்.
46
Teeth Whitening Tips In Tamil
திரிபலா சூரணம்
திரிபலா சூரணம் நமக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது நாட்டின் எந்த மூலையிலும் கிடைக்கும். திரிபலா சூரணம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்க மிகவும் தகவலாக செயல்படும்.
அதுமட்டுமல்லாமல் இது பல் பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால்.. இதனை வைத்து பல் துலக்கிப் பாருங்கள். இது உங்கள் பற்களை வெண்மையாக்கும்.
ஒரு காலத்தில் இந்த பற்பசைகள், பற்பொடிகள் எல்லாம் கிடையாது. ஆனால் நம் முன்னோர்களின் பற்கள் எல்லாம் பளிச்சென்று வெண்மையாக மின்னும். நம் தாத்தா, பாட்டி காலத்தில் கூட இன்றளவும் கிராமங்களில் இருப்பவர்கள் பற்பசையை பயன்படுத்துவதில்லை.
ஆனால் அவர்களின் பற்கள் எல்லாம் வெண்மையாக இருக்கும். அதன் ரகசியம் தான் மரக்கரி. ஆம் மரக்கரி பற்களை வெண்மையாக்கும். அதுமட்டுமல்லாமல் பற்களை வலுவாகவும் வைத்திருக்கும். எனவே நீங்கள் மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்க விரும்பினால் மரக்கரியை பயன்படுத்துங்கள். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.
பற்களில் உள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெயை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும். இது உங்கள் பற்களை வலுவாகவும் மாற்றும். அதுபோல தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிட்ட பிறகு கட்டாயமாக பல் துலக்க வேண்டும். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை, இரவு என பற்களை சுத்தம் செய்தால் உங்கள் பற்கள் வலுவாக இருக்கும். வெண்மையாகவும் இருக்கும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்க முயற்சிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் அதிக நேரம் பல் துலக்கினாலோ, அதிக நேரம் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தாலோ உங்கள் பற்கள் பாதிக்கப்படும்.