நாம் நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் அடிப்படையான விஷயம் தரையை துடைப்பது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் உங்கள் வீட்டிலுள்ள கரைகள் , அழுக்குகள் மற்றும் கிருமிகளை சுத்தமாக நீக்க சில டிப்ஸ் உங்களுக்கு உதவும். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகர் உண்மையில் ஒரு இயற்கை கிருமிநாசினியாகும். இது தரையை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் சிலருக்கு வினிகரில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே அதை வேறு வழியில் நீங்கள் பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க, அரை வாளியுல் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் அரை கப் வினிகரை கலந்து பயன்படுத்தலாம். மேலும் துர்நாற்றத்தை நீக்க அத்தியாவசிய எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: தரையில் விழுந்த உணவை 5 நொடிகளில் உண்ணலாமா?
floor cleaning
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நாம் சமையலுக்கு மட்டுமல்லாமல் வீட்டை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதை வைத்து தரையை சுத்தம் செய்தால் தரையின்
பளபளப்பை அதிகரிக்கச் செய்யும். இதனை செய்ய முதலில், அரை கப் பேக்கிங் சோடாவை அரை வாளி தண்ணீரில் போட்டு துடைத்து எடுத்தால் உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும்.
பாத்திரம் வாஷர்
உங்கள் வீட்டின் தரையை சுத்தம் செய்ய பாத்திரங்களை கழுவ நீங்கள் பயன்படுத்தும் டிஷ் வாஷர் சோப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும். இதனை செய்ய, முதலில் தண்ணீரில் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவுடன் டிஷ் வாஷரை பயன்படுத்தவும். ஒரு வாளி தண்ணீரில் 2 தேக்கரண்டி டிஷ் வாஷர் விடவும். பின் இதனுடன் வினிகர் சேர்த்து தரையை துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும்.