மழைக்காலத்தில் குழந்தைகள் வெளியே விளையாடச் செல்கீறார்களா? இந்த விஷயங்களை மனதில் வையுங்கள்..!!

Published : Jul 11, 2023, 02:03 PM ISTUpdated : Jul 11, 2023, 02:11 PM IST

மழைக்காலத்தில், சேறும் சகதியுமாக எங்கும் காணப்படும். இந்நிலையில் குழந்தைகளை வெளியே விளையாட  அனுப்பும்போது என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம். 

PREV
14
 மழைக்காலத்தில் குழந்தைகள் வெளியே விளையாடச் செல்கீறார்களா? இந்த விஷயங்களை மனதில் வையுங்கள்..!!

பருவமழையால் பல வகையான நோய்கள் பரவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகள் இந்த மழைக்காலத்திற்கு வெளியே விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினால், அவர்களை வெளியில் விளையாட அனுப்பும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். 

24

இந்த மாதிரி உடை:
மழைக்காலத்தில் குழந்தைகள் முடிந்தவரை மூடிய ஆடைகளை அணிய வேண்டும். முழு கை சட்டை, டி-சர்ட், குர்தா, ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றுடன் மட்டுமே அவற்றை அணியுங்கள். ஸ்லீவ்லெஸ் உடைகள் மற்றும் ஷார்ட்ஸ் அணிய வேண்டாம். பல இடங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் உறைந்து குழந்தைகளை கடிக்க பல்வேறு வகையான பூச்சிகள் வரும். மேலும் குழந்தைக்கு பருத்தி ஆடைகளை மட்டும் போட வைக்கணும்.  

34

கொசுக்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி:
கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, தண்ணீர் இருக்கும் இடங்களில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய இடங்களில் கொசுக்கள் அதிகமாக வளரும். குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்லும்போது அல்லது சிறிது நேரம் நடைபயிற்சி செல்லும்போது,  கண்டிப்பாக கொசுகளை எதிர்க்க கிரீம் அல்லது லோஷன் தடவ வேண்டும்.

இதையும் படிங்க: Monsoon Hacks: மழைக்காலத்தில் காலணிகளை உலர்த்துவதற்கான எளிய ஹேக்ஸ்...இனி துர்நாற்றம் வீசாது..!!

44

வெளி உணவுகளை சாப்பிட அனுமதிக்க கூடாது:
மழைக்காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும், குழந்தைகள் தெரு உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வெளியே கிடைக்கும் அனைத்து தெரு உணவுகளும் குழந்தைகளின் செரிமானத்தை கெடுக்கும். மழைக்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க, நீங்கள் அவர்களுக்கு காரமான மற்றும் வறுத்த உணவுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆகையால் மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படாமல் இருக்க இந்த குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories