வெறும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மையா! தினமும் ஒரு ரெய்டு போகலாமே!!

First Published | Aug 29, 2024, 5:37 PM IST

 சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக எளிமையான வழிகளில் ஒன்று. சைக்கள் ஓட்டுவது என்னென்ன விதங்களில் பலன் கொடுக்கிறது என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Cycling is one of the easiest ways to exercise

எந்த இடத்திலும், ஆண்டின் எந்த நேரத்திலும், அதிக செலவு இல்லாமல் சைக்கிள் ஓட்டலாம். அதுமட்டுமின்றி, பெரும்பாலானவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று தெரியும். ஒரு முறை கற்றுக்கொண்டால் மறக்கவும் செய்யாது.

Cycling builds strength and muscle tone

சைக்கிள் ஓட்டுதல் என்பது கால்களை மட்டும் உள்ளடக்கிய உடற்பயிற்சி அல்ல. சைக்கிள் ஓட்டும்போது உடலின் ஒவ்வொரு பகுதியும் ஈடுபடுவதால், சைக்கிள் ஓட்டுதல் ஒரு முழுமையான உடற்பயிற்சியாக உள்ளது.

Tap to resize

Cycling increases muscle tone

சைக்கிள் ஓட்டுதல் தசை செயல்பாட்டை படிப்படியாக மேம்படுத்துகிறது. அதிக உடற்பயிற்சி செய்யும்போது கூட சிறிதளவு சிரமப்பட நேரிடும். ஆனால், வழக்கமாக சைக்கிள் ஓட்டுவது கால் தசைகளை பலப்படுத்துகிறது. இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுகளின் இயக்கத்திற்கு உதவுகிறது.

Cycling builds stamina

சைக்கிள் ஓட்டுவது சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனென்றால் பொதுவாக பெரும்பாலான மக்கள் சைக்கிள் ஓட்டுவதை ரசிக்கிறார்கள்.

Cycling improves cardio-vascular fitness

சைக்கிள் ஓட்டுதல் இதயத்தை சீரான முறையில் துடிக்க வைக்கிறது. கார்டியோ-வாஸ்குலர் ஃபிட்னஸை மேம்படுத்த உதவுகிறது. வேலைக்குச் செல்ல சைக்கிள் ஓட்டுவது இருதய ஆரோக்கியத்தை 3-7% அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Cycling eats up calories

உடல் எடையைக் குறைக்கவும் சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த வழியாகும். ஒரு மணிநேரத்திற்கு சைக்கிள் ஓட்டுவதால் நம் உடலில் சுமார் 300 கலோரிகள் குறைகின்றன. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால், ஒரு வருடத்தில் 5 கிலோ அளவுக்குத் தேவையில்லாத கொழுப்பு குறையும்.

Cycling improves heart health

பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் 10,000 அரசு ஊழியர்களிடம் நடத்திய ஆய்வு முடிவின்படி, வாரத்திற்கு 20 மைல்கள் சைக்கிள் ஓட்டுவது கரோனரி இதய நோய் அபாயத்தை 50% குறைக்கும்.

Cycling improves coordination

சைக்கிள் ஓட்டுதல் என்பது முழு உடலையும் உள்ளடக்கிய ஒரு செயலாகும். எனவே, கை-கால், கால்-கை-உடல்-கண் ஒருங்கிணைப்பு மேம்படும்.

Cycling reduces stress

எந்தவொரு வழக்கமான உடற்பயிற்சியும் மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் குறைக்கும். வெளியில் சைக்கிள் ஓட்டுவது இயற்கையோடு ஒன்றாக இருக்கவும் புதிய சுவாசத்தை உணரவும் ஒரு சிறந்த வழியாகும். இது ஒருவரின் மனதை அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து வெளியேற்றி, புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

Latest Videos

click me!