நீங்கள் மல்லாந்து படுக்கும் போது, குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். அதுவே நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
இடதுபுறமாக படுத்திருப்பது மார்பு குழாய்கள் உடலுக்கு நச்சுகள், கழிவுகள் மற்றும் நினநீர் திரவத்தை வடிகட்ட போதுமான நேரம் அளிக்கிறது.
பெரும்பாலும், இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல் பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, இடது பக்கத்தில் தூங்கும் ஒருவருக்கு, நெஞ்சு எரிச்சல் உணர்வு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.