வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்துண்டுகளை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காமல் இருக்கும்.
வெள்ளி நகைகள் மீது தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே கொஞ்சம் விபூதியை கைகளில் எடுத்து லேசாக அழுத்தி தேய்த்தால் போதும். வெள்ளியில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். உடனே தண்ணீர் போட்டு கழுவாமல் ஈர துணி கொண்டு துடைத்து வையுங்கள். பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நல்ல தண்ணீரில் அலசினால் வெள்ளி நகைகள் பளிச்சென மின்னும், அதன் பிறகு நன்கு காய்ந்த துணியை கொண்டு உடனே துடைத்து எடுத்து விடுங்கள்.