டீயுடன் - பிரெட் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்..? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி..!

Published : Oct 03, 2022, 08:05 AM IST

Bread with tea: டீயுடன் ரொட்டி சாப்பிடுவது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

PREV
14
டீயுடன் - பிரெட் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்..? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி..!

காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள் ஏராளம். இன்னும் சிலர் டீயுடன் ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றை சேர்த்து குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், டீ உடன் ரொட்டி அல்லது பிஸ்கட், ரொட்டி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. டீயுடன் ரொட்டி சாப்பிட்டு காலை நேரத்தை தொடங்குபவர்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

24

எடை அதிகரிப்பு 

 நீங்களும் டீயுடன் ரொட்டி சாப்பிடும் போது ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஏனெனில், ரொட்டிகளில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. 

34

நீரழிவு பிரச்சனை:

நீரிழிவு நோயாகள் டீ மற்றும் ரொட்டி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இதன் காரணமாக நீரிழிவு  நோயாளிகள் டீயுடன் ரொட்டியை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

44

வயிற்றில் புண்கள் 

காலையில் டீயை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள சவ்வு மற்றும் குடல்களை கரைத்துவிடும். இது உங்களுக்கு பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் டீ சாப்பிடுவதால் உடலில் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

அதுமட்டுமின்றி, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பிபி அளவை அதிகரிக்கும். எனவே, இரத்த அழுத்த நோயாளிகளை மறந்தும்கூட, காலையில் டீயுடன் ரொட்டி சாப்பிடக்கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories