மோசமான உணவு பழக்கங்கள், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் இன்று உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதே பலரின் இலக்காக உள்ளது. இதற்காக பல்வேறு டயட் முறைகளையும், உணவு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அது ஒரு சவாலான பயணமாகும்., ஆனால் சரியான உத்திகள் மூலம், கூடுதல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு பிடித்த உணவுகளை நீங்கள் சாப்பிட முடியும். குறிப்பாக சாதம் என்பதே பலருக்கு பிடித்த உணவாக இருக்கும். ஆனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில் சிலர் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள்.
சாதம் சாப்பிட விரும்புவோருக்கு ஒரு குட்நியூஸ் உள்ளது. ஆம். சாதம் சாப்பிட்டாலும் நீங்கள் உடல் எடையை குறைக்கலாம். கவனமாக உட்கொள்ளும் போது அரிசி ஆரோக்கியமான எடை இழப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். எனவே, வெற்றிகரமான எடை இழப்புக்கு அதிக அளவு சாப்பிடுவதைத் தவிர்த்து, கலோரி பற்றாக்குறையைப் பராமரிக்கும் போது நீங்கள் சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.