
தூக்கம் தான் மனிதனுடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் காலக் கண்ணாடி. ஒருவர் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கினால் பல நோய்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாம். நல்ல தூக்கம் ஒருவருடைய உடலுக்கு மட்டுமின்றி மனநலனுக்கும் அவசியமானது.
ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இருப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலானோர் நேராக தூங்குவது மட்டுமே சிறந்தது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூங்கும் போது இடது புறமாக படுத்திருந்தால் தான் பல நன்மைகளை பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எந்த செயலும் செய்யாமல் உடலுக்கு ஓய்வு கொடுத்து மெய்மறந்த நிலையில் இருப்பது தான் தூக்கம். இந்த நேரத்தில் நாம் சுயநினைவின்றி காணப்படுவோம். சிலருக்கு தூக்கத்தில் உலகமே புரண்டாலும் தெரியாது. சிலரோ குண்டூசி விழும் சத்தம் கேட்டு விழிப்பார்கள். இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை எனலாம்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் எந்த பக்கம் கை செல்கிறது, காலை எங்கு தூக்கி போடுகிறோம். எதுவுமே நமக்கு தெரியாது. ஆனால் தூங்கும் நிலைக்கும் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளது தெரியுமா? ஏனென்றால் நாம் தூங்கினாலும், நம்முடைய உள்ளுறுப்புகள் இயங்கிக் கொண்டு தானிருக்கும்.
அதனால் உள்ளுறுப்புகள் இயங்க வசதியான பக்கம் படுப்பதே சரியாக இருக்கும். மக்களில் சிலர் மேலே பார்த்தபடி நேராக படுப்பதை தான் சரி என கருதுகின்றனர். ஆனால் அது தவறு. இடது பக்கம் தூங்குவது தான் உடல்நலனை மேம்படுத்தும். ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நாம் தூங்கும் போது இடது புறமாக படுத்துக் கொள்வதால் பல நோய்களில் இருந்து தப்பலாம். ஏனென்றால் இடது புறம் தூங்குவதால் செரிமான மண்டலம் நன்கு இயங்குகிறது. நம் சாப்பிடும் உணவை உறிஞ்சும் குடல் இயக்கமும் மேம்படும். செரிமானம் மேம்பட்டாலே உடலில் உள்ள நச்சுகள் முறையாக வெளியேறும். அதனால் இடதுபுறம் தூங்குவதை இன்றிலிருந்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரி, இப்போது இடது பக்கமாக தூங்குவதால் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.
டாக்ஸின்கள் வெளியேறும்
இடது பக்கமாக தூங்கும் போது நிணநீர் வடிகால் மூலம் டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இதனால் டாக்ஸின்கள் உடலில் தேங்குவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு மேம்படும்
உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் தேங்கக்கூடும். ஆனால் இடது பக்கமாக தூங்கினால், இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும்.
செரிமானம் நன்கு செயல்படும்
இடது பக்கமாக தூங்குவதால், இரைப்பை மற்றும் கணையம் இயற்கையாக சந்திக்கும். இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெறும். மேலும் உணவுகளும் இரைப்பையின் வழியாக அதிகப்படியான ஈர்ப்பின் காரணமாக எளிதில் செரிமானமாகி வெளியே தள்ளப்படும்.
மென்மையான குடலியக்கம்
இடது பக்கமாக தூங்கும் போது, உண்ட உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படும். இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றலாம்.
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல்
இடது பக்கம் தூங்குவதன் மூலம், அசிடிட்டியை உண்டாக்கிய இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.
அசௌகரியம் தடுக்கப்படும்
இடது புறமாக தூங்குவதால், கல்லீரல் மற்றும் பித்தப்பை இயற்கையாக சந்திப்பதோடு, எவ்வித கழிவுகளும் இல்லாமல் நிணநீர் அதிகமாக சுரக்கப்படும். இதனால் உண்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி, அசௌகரியத்தைத் தடுக்கும்.
கொழுப்புக்களும் கரையும்
அனைவருக்குமே கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து செரிமானத்திற்கு தேவையான பித்தநீர் சுரக்கப்படுகிறது என்று தெரியும். அதிலும் இடது புறமாக தூங்கும் போது, இந்த பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடலில் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படும்.
வலது பக்கம் தூங்குவதால் என்ன நடக்கும்?
வலது பக்கமாக படுப்பதால், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதோடு, செரிமானம் மோசமாக நடைபெறும்.
நேராக படுப்பதால் என்ன நடக்கும்?
நேராக படுக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். மற்றும் மூச்சுத்திணறல் அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் இந்நிலையில் படுப்பது மிகவும் ஆபத்தானது.
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?
பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும். இடது பக்கமாக தூங்குவதால், பல நோய்கள் தடுக்கப்படும்.
தூங்கும் போது நாம் எந்த நிலையில் இருப்போம் என்றே நமக்குத் தெரியாது. ஆனால் தூங்கும் நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரியுமா? ஆம், பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும்.
இடது பக்கமாக தூங்குவதால், பல நோய்கள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் மேம்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும். எனவே தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
இடப்பக்கம் தூங்குவதன் நன்மைகள்:
குறட்டை:
நீங்கள் தூங்கும் போது குறட்டை விடும் நபராக இருந்தால் இடது பக்கமாக திரும்பிப் படுப்பது நல்லது. இது உங்களுடைய சுவாச பாதைகளை திறந்து வைக்க உதவுகிறது. இடது பக்க தூக்கம் நுரையீரல் திறனை அதிகரிக்கும். அதனால் இரவில் குறட்டையை குறைக்க முடியும் உங்களுக்கு அருகில் தூங்குபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
இரத்த அழுத்தம்:
இடது பக்கம் தூங்கினால் இரத்த அழுத்தம் சீராகும் வாய்ப்புள்ளது. இதயத்திற்கும் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். ஆய்வுகளின் படி, இடது பக்கம் தூங்குவதால் அல்சைமர், பார்கின்சன் நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.
நச்சுக்கள் வெளியேறும்
இடது பக்கமாக தூங்கினால் மூளையில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி நிணநீர் வடிகால் வழியாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். உடலில் நச்சு நீக்கியாக மருந்துகள் கூட சாப்பிட அவசியமில்லை. இடது புறம் தூங்கினாலே டாக்ஸின்கள் உடலில் தேங்காமல் தடுக்கலாம். கடும் நோய்களில் இருந்து கூட தப்பலாம்.
சிறுநீரக செயல்பாடு
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல், சிறுநீரகங்களில் தான் அதிகமான கழிவுகள் கிரகிக்கப்படுகின்றன. அதனாலே இங்கு டாக்ஸின்கள் படியக் கூடும். நீங்கள் இடது புறமாக தூங்கினால், இந்த உள்ளுறுப்புகளில் தேங்கி இருக்கும் கழிவுகள், நச்சுகள் தானாகவே வெளியேறும்.
செரிமானம் மேம்படும்:
இடது பக்கமாக உறங்கினால், இரைப்பை, கணையம் நன்கு செயல்படும். இயற்கையாகவே அவை சிறப்பாக செயல்பட இடப்பக்கத் தூக்கம் உதவுகிறது. உடலில் உணவு செரிமான சரியாக நடப்பது மிகவும் முக்கியம். நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையின் வழியாக அதிகப்படியான ஈர்ப்பினால் விரைவாக செரிமானமாகிவிடும்.
குடலியக்கம்:
இடது பக்கமாக தூங்கினால் அவர்கள் உண்ணும் உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு சுலபமாகத் தள்ளப்படுகிறது. இதன் காரணமாக மலச்சிக்கலை தவிர்க்கலாம். இடது பக்கம் தூங்கினால் காலையில் எழுந்ததுமே உடலில் உள்ள நச்சுக்கள் மலமாக வெளியேறிவிடும்.
நெஞ்செரிச்சல் நிவாரணம்:
சிலருக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இரவில் தூங்கும் முன்பாக நெஞ்செரிச்சலால் சிரமப்படுவார்கள். இவர்கள் இடது புறமாக தூங்கினால் அசிடிட்டியை ஏற்படுத்தும் இரைப்பை அமிலம் உணவு குழாய் வழியாக மேலே ஏறாமல் தடுக்கப்படும். இப்படி செய்வதால் நெஞ்செரிச்சலையும் எளிதாக தவிர்க்கலாம்.
வலி நிவாரணம்:
இடப்புறம் தூங்குவதால் முதுகுத்தண்டில் அழுத்தம் குறைக்கப்படும். இதனால் முதுகுவலி குறையும்.
கொழுப்பு கரைய!
இடது புறமாக தூங்குவதால் பித்த நீர் அதிகமாக சுரக்க வாய்ப்புள்ளது. செரிமானத்திற்கு தேவைப்படும் பித்தநீர் கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றில் இருந்து தான் சுரக்கும். இடதுபக்கமாக தூங்கும் நபர்களுக்கு பித்தநீர் உற்பத்தி அதிகமாகும். இதனால் உணவில் உள்ள கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. நம் உடலில் தேவையில்லாமல் தங்கும் கொழுப்புக்கள் தடுக்கப்படும். கல்லீரலில் கொழுப்பு படியாமல் இருக்கும்.
யார் இடப்பக்கம் தூங்கக் கூடாது?
கர்ப்பிணிகள் (20 வாரங்களுக்குப் பின்)
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள்.
கடுமையான முதுகெலும்பு பிரச்சனை உள்ளவர்கள்.
இவர்கள் தலையணை மீது ஆதரவாக கால்களை வைத்து வலது பக்கமாக தூங்கலாம்.
வலது புறமாக தூங்கினால் நல்லதா?
வலது பக்கமாக உறங்குவதால் டாக்ஸின்கள் நம் உடலில் இருந்து வெளியேறாது. இதனால் செரிமான மண்டலம் மந்தமாக இயங்கும். உணவு செரித்தலில் மோசமான பாதிப்பு ஏற்படும்.
நேராக படுத்தால் நல்லதா?
நேராக உறங்கினால் இரவில் சுவாசிக்க சிரமப்படுவீர்கள். சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற சுவாசக் கோளாறு ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த மாதிரி தூங்குவது பாதிப்பை உண்டு பண்ணலாம்.