Stain Removal Tips In Tamil
துணிகளை துவைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு சவாலான காரியம் என்று சொல்லலாம். அதுவும் குறிப்பாக பெரிய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு துணிகளை துவைத்து முடிக்கவே அதிக நேரம் எடுக்கும். அதுவும் இன்றைய காலத்தில் என்ன தான் வாஷிங் மெஷின் வந்தாலும் அதில் துணிகளை போட்டு துவைத்தாலும் கூட, துணிகளில் ஒட்டி இருக்கும் கறைகள் மட்டும் நீக்காமல் அப்படியே இருக்கும். இதனால் பலர் அதை பயன்படுத்தாமல் அப்படியே குப்பையில் போட்டு விடுவார்கள்.
பொதுவாகவே துணிகளில் இருக்கும் கறைகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம் ஆகும். அதுவும் குறிப்பாக, நாம் அதிக விலை கொடுத்து ஆசை ஆசையாக வாங்கிய துணிகளில் கறைப்பட்டு விட்டால் மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் சில கறைகளை சில வழிகள் மூலம் சுலபமாக நீக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் கண்டிப்பாக இதற்கு ஆம் என்று தான் பதில்.
Stain Removal Tips In Tamil
ஆனால், ஒரே முயற்சியில் இது சாத்தியம் என்றால் உத்தரவாதம் இல்லை. கரை நீங்கும் வரை கண்டிப்பாக நீங்கள் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே இத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆடைகளில் படிந்து இருக்கும் விடாப்பிடியான கரையை சுலபமான முறையில் போக்குவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஆடைகளில் இருக்கும் விடாப்படியான கறையை போக்க டிப்ஸ் :
உப்பு :
உப்பைக் கொண்டு ஆடையில் இருக்கும் துரு மற்றும் ஆல்கஹால் கறைகளை சுலபமாக ஆற்றி விடலாம். உங்கள் ஆடையில் ஆல்கஹால் கறை இருந்தால் அதன் மீது உப்பை அப்படியே வைத்து விட்டு, உப்பு திரவத்தை உறிஞ்சும் வரை காத்திருங்கள். பிறகு உங்களது ஆடையை எப்போதும் போல துவைத்து காய போடவும். ஒருவேளை நீங்கள் உங்களது ஆடையை சரியாக துவைக்கவில்லை என்றால், உப்பு உங்கள் ஆடையின் மீது வெள்ளை கறையை ஏற்படுத்தும்.
Stain Removal Tips In Tamil
வெள்ளை வினிகர் :
ஆடைகளில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை மற்றும் வியர்வை கறையை நீக்க ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது மற்ற வினிகருக்கு பதிலாக நீங்கள் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். இது துணிகளில் படிந்து இருக்கும் கறைகளை நீக்குவது மட்டுமின்றி, ஆடையின் உண்மையான நிறத்தை சேதப்படுத்தவே படுத்தாது. இது தவிர, இது ஆடையில் படிந்திருக்கும் துர்நாற்றத்தை போக்கவும், பூஞ்சை காளான் கரைகளை அகற்றவும் உதவுகிறது.
முகத்திற்கு போடும் பவுடர் :
ஆடையில் இருக்கும் எண்ணெய் கரையை போக்க முகத்திற்கு போடும் பவுடர், பேபி பவுடர் அல்லது சோள மாவு, சாக்பிக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதற்கு உங்களது ஆடையில் எண்ணெய் கறை அல்லது கிரீஸ் ஏதேனும் பட்டால் உடனே மேலே சொன்ன ஏதாவது ஒரு பொருட்களில் ஒன்றை கறை படிந்த இடத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு எப்போதும் போல உங்களது ஆடையை துவைத்து காய போட்டால் கறை முற்றிலும் நீங்கி இருக்கும்.
Stain Removal Tips In Tamil
எலுமிச்சை :
உங்களது வெள்ளை துணியில் படிந்திருக்கும் கரையை அகற்ற எலுமிச்சையை தாராளமாக பயன்படுத்தலாம். எலுமிச்சையில் இருக்கும் அசிட்டிக் அமிலம் ஆடைகளில் இயற்கையான ஃப்ளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளதால், இது ஆடைகளில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை மற்றும் பிற கறைகளை அகற்ற சிறப்பாக உதவுகிறது.
இதற்கு கரைகள் படிந்து இருக்கும் இடத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு தேய்த்தால் போதும், கறை உடனே நீங்கிவிடும். இது தவிர ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோப்புத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து அதை கறை படிந்திருக்கும் ஆடையில் தடவி சிறிது நேரம் கழித்து துவைக்கவும். வேண்டுமானால் இதனுடன் கொஞ்சம் வினிகரும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Stain Removal Tips In Tamil
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா சமையலறையில் மட்டுமின்றி ஆடைகளில் படிந்து இருக்கும் கறைகளை போக்கவும் மற்றும் ஆடைகளுக்கு புதிய வாசனையை கொடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உங்களது துணியை மென்மையாக்கவும், கஷ்டப்படாமல் ஆடுகளில் படிந்து இருக்கும் விடாப்படியான கறையை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.
சாயம் படிந்த துணியை துவைப்பதற்கு பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்த நீரில் அந்த துணியை சிறிது நேரம் ஊற வைத்து விட்டு, பிறகு கறை படிந்த இடத்தை மட்டும் லேசாக துவைக்கவும். எப்போதும் போல துவைத்து காய போட்டால் ஆடையில் படிந்து இருக்கும் சாய கறை அனைத்தும் காணாமல் போயிருக்கும். உங்களது துணியும் பழைய நிலைமைக்கு வந்து விடும்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் செலவில்லாமல் மாதவிடாய் கறையை அகற்ற சூப்பரான டிப்ஸ் இதோ!
Stain Removal Tips In Tamil
நினைவில் கொள் :
நீங்கள் பயன்படுத்திய அழுக்கு ஆடைகளை கண்ட கண்ட இடத்தில் போடாமல், அதை போட்டு வைப்பதற்கு இருக்கும் கூடையில் போடவும்.
எல்லா துணிகளையும் ஒரே நேரத்தில் சுவைக்காமல், தினமும் உடுத்தும் ஆடைகள், பட்டு துணிகள், உள்ளாடைகள் என துணிகளை தனித்தனியாக ஊறவைத்து துவைக்க பழகுங்கள். உள்ளாடைகளை தனியாக துவைப்பதற்கு முக்கிய காரணம் கிருமித் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகத்தான்.
அதுபோல நீங்கள் துணியை காய போடும்போது துணியின் உட்புறம் வெளியில் தெரிந்தவாறு காய போடவும். இதனால் அடிக்கும் வெயிலில் துணியில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
துணிகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் காய வைக்கவும். துணி வெயிலில் காயும் போது கிருமிகள், கெட்ட வாடை அதிலிருந்து நீங்கும்.
இதையும் படிங்க: வெள்ளை சட்டையில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக நீக்க 4 டிப்ஸ்!!