உலகின் மிகவும் விலை உயர்ந்த 8 வீடுகள்: அம்பானியின் ஆண்டிலியா எந்த இடத்தில் உள்ளது?

First Published | Sep 21, 2024, 6:10 PM IST

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,67,23,54,00,000 மதிப்புடைய இந்த வீடு 27 மாடிகள் கொண்டது.

சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பர வீட்டில் வாழ்வது என்பது பெரும் பணக்காரர்களுக்கு பொதுவான விஷயம். ஆடம்பர பொருட்கள், கார்கள் மட்டுமின்றி தங்கள் ஆடம்பர பங்களாக்கள், வில்லாக்கள் மூலமும் கோடீஸ்வர்கள் தங்கள் செல்வ செழிப்பை நிரூபித்து வருகின்றனர்.

இதற்காக விலை உயர்ந்த பிரம்மாண்ட சொகுசு வீடுகளை கட்டி அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலகின் மிக விலையுயர்ந்த 8 வீடுகள் குறித்தும் அதில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீடான ‘ஆண்டிலியா’ எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Kingston Palace

18-19 கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ், லண்டன்

உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளின் பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் அரண்மனை தோட்டம் 8-வது இடத்தில் உள்ளது. இந்த ஆடம்பர வீட்டின் மதிப்பு சுமார் 222 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய ரூ.18,56,28,51,900 ஆகும். இந்த ஆடம்பர வீட்டில் மிகப்பெரிய தோட்டங்கள், சலூன்கள், உட்புற குளங்கள், ஸ்பா என பல வசதிகள் இருக்கின்றன.

4 ஃபேர்ஃபீல்ட் பாண்ட், அமெரிக்கா

அமெரிக்காவில் நான்கு ஃபேர்ஃபீல்ட் பாண்ட் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இந்த ஆடம்பர வீட்டின் மதிப்பு சுமார் 248 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,73,68,79,600 ஆகும். இந்த ஆடம்பர வீடு பிரபல பெரும்பணக்காரர் ஐரா ரென்னெர்ட்டிற்கு சொந்தமானது, மேலும் இது அமெரிக்காவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.

Tap to resize

ஓடியன் டவர் பென்ட்ஹவுஸ், மொனாக்கோ

ஆடம்பரத்தையும் பிரமாண்டத்தையும் உயர்த்தி பிடிக்கும் அமைந்துள்ள இந்த ஓடியன் டவர் பென்ட்ஹவுஸ் ஆடம்பர வீடு மொனாக்கோவில் உள்ளது.உலகின் மிகவும் விலை உயர்ந்த 8 வீடுகளில் இந்த வீடு 6 வது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய நீச்சல் குளம், பிரைவேட் நீர் ஸ்லைடு என பல சொகுசு வசதிகளை கொண்டிருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 335 மில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.28,01,10,58,500 ஆகும். இது மொனாக்கோவின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளிலொன்றாகும் 

லெஸ் பலாயிஸ் புல்லஸ், பிரான்ஸ்

பழமையான ஆடம்பர வீடுகளில் ஒன்றான Les Palais Bulles வீடு பிரான்ஸில் அமைந்துள்ளது. இந்த ஆடம்பர வீட்டின் மதிப்பு 400 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ. 33,44,60,40,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகர் அருகே இந்த ஆடம்பர வீடு அமைந்துள்ளது.

வில்லா லெஸ் செட்ரெஸ், பிரான்ஸ்

பிரான்சின் மற்றொரு விலையுயர்ந்த ஆடம்பர வில்லா லெஸ் செட்ரெஸ் ஆகும். இதன் மதிப்பு சுமார் 410 மில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.34,28,52,25,000 என. இது 35 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட அரண்மனை தற்போது. தற்போது கோடீஸ்வரரான ரினாட் அக்மெடோவ் என்பவருக்குச் சொந்தமானது. பிரான்ஸின் விலை உயர்ந்த ஆடம்பர வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

வில்லா லியோபோல்டா, பிரான்ஸ்

உலகின் மிகவும் விலை உயர்ந்த 8 ஆடம்பர வீடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் பிரான்ஸின் லியோபோல்ட்டோ உள்ளது. இதன் மூலம் உலகின் பல ஆடம்பர வீடுகள் பிரான்ஸில் தான் உள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது. லியோபோல்டா ஆடம்பர வில்லாவின் மதிப்பு சுமார் 750 மில்லியன் டாலராகும், அதாவது இந்திய மதிப்பில் ரூ.62,71,25,25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்டிலியா, இந்தியா

இந்த பட்டியலில் இரண்டாவது மிக விலையுயர்ந்த சொத்து இந்தியாவில் உள்ளது. ஆம். முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா ஆகும். இந்த அடம்பர வீட்டின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,67,23,54,00,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 27 மாடிகள் கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் மினி தியேட்டர், 9 பெரிய லிஃப்ட், நீச்சல் குளம், ஹெலிபேடுகள், 100க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் இடம் என பல வசதிகள் இருக்கின்றன. இந்த பிரம்மாண்ட வீட்டை கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவுடன் அரண்மனை போல் இருக்கும் இந்த ஆடம்பர வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பக்கிங்ஹாம் அரண்மனை
உலகின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர வீடுகள் பட்டியலில், இங்கிலாந்து மன்னரின் பக்கிங்ஹாம் அரண்மனை முதலிடத்தில் உள்ளது. இந்த அரண்மனை 4.9 பில்லியன் டாலர் மதிப்புடையது, இந்திய மதிப்பில் ரூ.4,09,72,67,30,000  மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!