
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விலைவாசி உயர்வு காரணமாக நாம் வாழ்வது மிகவும் கடினம் என்று சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில், நாம் எவ்வளவுதான் சேமித்து வைத்தாலும், போதாது.
அந்த வகையில், மழை காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்துவது சிலிண்டர். காரணம், இந்த பருவத்தில் உணவை சூடாக நாம் சாப்பிட விரும்புகிறோம். இப்படி சாப்பிடுவது கூட ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம். ஆனால், இப்படி தொடர்ந்து செய்வதினால் கேஸ் விரைவில் தீர்ந்து போய்விடும்.
கேஸ் சிலிண்டர் விலையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதை எவ்வளவுதான் சிக்கனமாக பயன்படுத்தி வந்தாலும் சீக்கிரமே கேஸ் தீர்ந்து, இல்லத்தரசிகளுக்கு தலைவலியை கொடுக்கும். ஆனால், மழைக்காலத்தில் சமைக்கும்போது கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து போகாமல் இருக்க, அதை இரண்டு மாதம் வரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே இல்லத்தரசிகள் அனைவரும் கேஸ் அதிக நேரம் நீடிக்க பல குறிப்புகளை பயன்படுத்தி இருப்பார்கள். அதாவது, முன்கூட்டியே பருப்பு, அரிசியை ஊறவைத்து சமைப்பது, ஒரே நேரத்தில் சமையல் செய்து முடிப்பது போன்றவையாகும். ஆனால், இப்படி செய்தால் கூட சிலருக்கு ஒரு மாதத்திலேயே காலியாகி விடுவதாக சொல்லுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கேஸ் சிலிண்டரை நீண்ட நாளுக்கு பயன்படுத்த சில டிப்ஸ் இங்கே...
மழைக்காலத்தில் கேஸ் நீண்ட நாள் பயன்படுத்த டிப்ஸ் :
ஊற வைத்து சமைக்கவும் :
பொதுவாகவே, தானியங்கள் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் கேஸ்சும் அதிகம் செலவழிந்து விடும். எனவே, அரிசி பருப்பு போன்றவற்றை சமைக்கும் முன் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் அவை சீக்கிரமே ரெடியாகிவிடும். இதனால் மழைக்காலத்தில் கேஸூம் மிச்சமாகும்.
கேஸ் பர்னர் சுத்தமாக வை:
கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து போகாமல் அதை நீண்ட நாள் சேமிக்க முதலில் கேஸ் பர்னர் சுத்தமாக வையுங்கள். குறிப்பாக கேஸ் பர்னரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். கேஸ் பர்னர் சுத்தமாக இருக்கிறதா.. இல்லையா.. என்பதை, அடுப்பில் எரியும் நெருப்பின் நிறத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். அதாவது, கேஸ் அடுப்பில் எரியும் நெருப்பின் நிறம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறத்தில் வந்தால், உங்களது பர்னர் சிக்கலில் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, பர்னரை உடனே சர்வீஸ் செய்யுங்கள். இதன் மூலம் மழைக்காலத்தில் கேஸ் வீணாவதை தவிர்க்க முடியும்.
குக்கர் பயன்படுத்துங்கள் :
மழைக்காலத்தில் கேஸ் நீண்ட நாள் சேமிக்க சமைக்கும் போது, திறந்த அல்லது மூடியில்லாத பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக குக்கரை பயன்படுத்துங்கள். இதனால் அரிசி பருப்பு, காய்கறிகள் போன்றவை சீக்கிரமே வேகும். கேஸூம் அதிகம் வீணாகாது. சமையலும் சீக்கிரமே முடிந்துவிடும்.
சமைக்கும் பாத்திரம் ஈரமாக இருக்கக் கூடாது:
பொதுவாகவே நாம் சமைக்கும் பாத்திரம் அடுப்பில் வைக்கும் முன் ஈரமாகவே இருக்கக் கூடாது. ஆனால், பெரும்பாலான இல்லத்தரசிகள் பாத்திரத்தை கழுவியதுமே, அந்த ஈரத்துடனே பாத்திரத்தை அடுப்பில் வைத்து விடுவார்கள். பாத்திரத்தை இப்படி ஈரத்துடன் அடுப்பில் வைத்து பயன்படுத்தினால் கேஸ் சீக்கிரமே தீர்ந்து போக வாய்ப்பு அதிகம் உள்ளது. காரணம், ஈரமான பாத்திரம் உடனே சூடாகாது. எனவே, பாத்திரத்தை ஒரு துணியால் நன்கு துடைத்து பிறகு அடுப்பில் வைத்து பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டரை நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: மழை காலத்தில் பாம்புகளை விரட்ட இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும்!!
இந்த தவறை செய்யாதீங்க!
பலரும் பிரிட்ஜில் இருந்து எடுத்து வந்த பொருளை உடனே சமைக்க பயன்படுத்துவார்கள். ஆனால், இது தவறு. இப்படி செய்வதன் மூலம் கேஸ் அதிகம் வீணாகும். எனவே, எந்த ஒரு பொருளையும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்த உடனே அதை சுமார் ஒரு மணி நேரம் அறையின் வெப்ப நிலையில் வைத்துவிட்டு பிறகு சமைக்கவும்.
அதுபோலவே சிலர் கேஸ் அடுப்பை குறைவான தீயில் வைத்து எல்லாவற்றையும் சமைப்பார்கள். ஆனால், மழைக்காலத்தில் இப்படி சமைப்பது நல்லதல்ல. காரணம் வெப்பநிலை குறைவாக இருப்பதால், சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் கேஸூம் வீணாகும்.
இதையும் படிங்க: மழை வர போது.. துண்டுகள், பெட்ஷீட்களில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சிம்பிளான 10 டிப்ஸ்!!