பொதுவாகவே வீட்டில் எறும்புகள், பூச்சிகள், எலிகள் ஆகியவற்றை நம்மை தொந்தரவு செய்யும். அந்த லிஸ்டில் கரையானும் உண்டு. கரையான் வீட்டின் சுவர், மரப் பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை அரித்துவிடும். பலரது வீடுகளில் கரையான் தொல்லை அதிகமாகவே இருக்கும்.
26
Get Rid Of Termites In Tamil
அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் கரையான்கள் ரொம்பவே சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் ஈரப்பதம் தான். மேலும் இந்த காலகட்டத்தில் தான் அவைகள் இனப்பெருக்கம் செய்யும். இத்தகைய சூழ்நிலையில், கரையான் இருப்பதை வீட்டில் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதை எளிதில் சரி செய்து விடலாம்.
அந்த வகையில், உங்கள் வீட்டில் கரையான் அதிகமாக இருந்தால் அதை நிரந்தரமாக எப்படி அழிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூச்சிகள், கரையான்களை கொள்வதற்கு எலுமிச்சை பெரிதும் உதவுகிறது. ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிக்காது. இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் வினிகர் சேர்ந்து நன்றாக கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கரையான் அரித்துள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கரையான் முற்றிலும் அழிந்துவிடும். இனி வரவே வராது.
46
Get Rid Of Termites In Tamil
கிராம்பு:
வீட்டில் இருக்கும் கரையான்களை அழிப்பதற்கு கிராம்பு பெரிதும் உதவுகிறது. ஆனால் அதை நேரடியாக பயன்படுத்த முடியாது. எனவே இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கிராம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை நன்கு ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கரையான் உள்ள இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் கரையான்கள் ஒரேடியாக அழிந்துவிடும்.
ஆரஞ்சு எலுமிச்சை பழம் ஆகியவற்றில் சிட்ரஸ் அதிகமாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருக்கும் கரையான்களை கொள்ளுவதற்கு சிட்ரஸ் ஆயிலை பயன்படுத்தலாம். சிட்ரஸ் ஆயில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். கரையான் கொல்வதற்கு தண்ணீரில் சிட்ரஸ் ஆயிலை கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கரையான் இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால் கரையான் முற்றிலும் ஒளிந்து விடும்.
66
Get Rid Of Termites In Tamil
வேப்ப எண்ணெய்
வீட்டில் இருக்கும் கரையானை அழிப்பதற்கு வேப்ப எண்ணெய் உதவுகிறது. மேலும் வேப்ப எண்ணெயில் இருக்கும் வாசனை கரையானை ஒரேடியாக அளிக்க உதவுகிறது. இந்த எண்ணெய் கரையான் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகளையும், கொசுக்களையும், ஈக்களையும் அழிக்கும். இப்போது இந்த வேப்ப எண்ணையை ஒரு துணியில் நனைத்து அதை கொண்டு கரையான் உள்ள இடங்களை துடைத்தால் கரையான் அழிந்துவிடும்.