தினமும் வெறும் வயிற்றில் '2' புதினா இலைகள்.. '3' முக்கிய உடல் பிரச்சனைக்கு தீர்வு!!
Pudina Leaves Benefits : தினமும் வெறும் வயிற்றில் புதினா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Pudina Leaves Benefits : தினமும் வெறும் வயிற்றில் புதினா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அனைத்து நோய்களும் வயிற்றுடன் தான் இடைக்கப்பட்டுள்ளன. மோசமான செரிமானம் வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு, மலச்சிக்கல், மனநிலை மாற்றங்கள், தூக்கப் பிரச்சனை சோர்வு மற்றும் குமட்டல் போன்ற வயிற்று தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை இவை இரண்டும் உங்கள் வயிற்றை நோயெறச் செய்கிறது. நீங்கள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த விரும்பினால் உங்களது உணவில் சில உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். அவற்றில் ஒன்றுதான் புதினா.
புதினா ஒருவகை மூலிகையாகும். அதில் இருக்கும் பண்புகள் ஆரோக்கியத்தில் மந்திர வேலைகளைச் செய்கிறது தெரியுமா? புதினா இலைகள் அவற்றின் வாசனை மற்றும் குளிர்ச்சியான சுவைக்காக அறியப்படுகிறது. இது பொதுவாக சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த இலையே உங்களது அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்டால் உங்களது செரிமானத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். புதினா இலைகள் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திற்கு அருமருந்தாகும்.
அந்தவகையில் தினமும் வெறும் வயிற்றில் புதினா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்:
நிபுணர்களின் கூற்றுப்படி, புதினா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, செரிமான மண்டலத்தின் தசைகளை வலுப்படுத்தும், அஜீரணம், வாயு, குடல் நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
நெஞ்செரிச்சலைப் போக்கும்:
புதினா நெஞ்செரிச்சலுக்கு அருமருந்தாகும். ஏதாவது சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே புதினா இலைகளை சாப்பிட்டால், நெஞ்செரிச்சலிலிருந்து நிவாரணம் உடனே கிடைக்கும்.
இதையும் படிங்க: Mint water: ஜொலிக்கும் சருமம்! அதிகாலையில் புதினா வாட்டர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
தினமும் வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் பண்புகள் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
சருமத்தை பளபளப்பாக்கும்:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா இலைகளை சாப்பிட்டால் உங்களது உடலை இயற்கையாகவே நச்சுத்தன்மையாக்குகிறது. இது சருமத்தை இயற்கையாக பளபளக்க செய்ய உதவுகிறது. இது தவிர, புதினா இலையில் இருக்கும் ஆன்ட்டி-பாக்டரியல் பண்புகள் சரும தொற்று, பருக்கள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.