Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம், ரெஸ்ட்ரூம், பாத்ரூம். இந்த மூணு வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? ஆபீஸ், மால், ஹோட்டல், வீடுன்னு ஒவ்வொரு இடத்துலயும் எந்த வார்த்தையை சரியா பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கோங்க.
நாம டெய்லி லைஃப்ல நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை ஒரே அர்த்தத்துல பயன்படுத்துறோம். குறிப்பா, டாய்லெட் போற இடத்தை 'பாத்ரூம்', 'வாஷ்ரூம்', 'ரெஸ்ட்ரூம்'னு மாத்தி மாத்தி சொல்றோம். ஆனா, மொழி விதிகள் படி, ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வார்த்தை இருக்கு. தப்பான இடத்துல தப்பான வார்த்தையை யூஸ் பண்ணா நல்லா இருக்காது. எந்த இடத்துல எதைச் சொல்லணும்னு இப்போ பார்க்கலாம்.
வாஷ்ரூம் (Washroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?
நீங்க வேலை பார்க்குற ஆபீஸ்லயோ இல்ல வேற ஏதேனும் கார்ப்பரேட் இடத்துலயோ 'வாஷ்ரூம்' (Washroom) என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தணும். இங்க போய் பாத்ரூம், ரெஸ்ட்ரூம்னு சொன்னா அது தப்பு. வாஷ்ரூம்ங்கிறது ஒரு புரொஃபஷனல் வார்த்தை. ஆபீஸ்கள்ல டாய்லெட் வசதியோட, கை, முகம் கழுவ வாஷ் பேசின், கண்ணாடி இருக்கும். இது ஒரு ஃபார்மல் சூழல்ங்கிறதால, 'வாஷ்ரூம்'னு சொல்றதுதான் சரி.
ரெஸ்ட்ரூம் (Restroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?
ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், ஹோட்டல் இல்ல பெரிய ரெஸ்டாரன்ட் போறீங்களா? அங்க 'ரெஸ்ட்ரூம்' (Restroom) என்ற வார்த்தையை யூஸ் பண்ணுங்க. வெளியில சுத்திட்டு வர்றவங்க கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகவும், ரெஸ்ட் எடுக்கவும் இந்த இடத்தை பயன்படுத்துவாங்க. பெண்கள் மேக்கப் சரி செய்யவும், பயணிகள் ரிலாக்ஸ் பண்ணவும் இது உதவுறதாலதான் இதுக்கு 'ரெஸ்ட்ரூம்'னு பேரு.
நாம பேசுற மொழி நம்மளோட ஆளுமையைக் காட்டும். நாம இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி நம்ம பேச்சும் மாறணும். இனிமே ஆபீஸ்ல பாத்ரூம்னும், வீட்ல ரெஸ்ட்ரூம்னும் சொல்ற தப்பை செய்யாதீங்க. சரியான இடத்துல சரியான வார்த்தையை யூஸ் பண்ணி உங்க கம்யூனிகேஷன் ஸ்கில்லை இன்னும் சூப்பராக்குங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.