தலையணைக்கு அடியில் இந்த பொருட்களை வைத்து தூங்கினால் ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும் பெருகுமாம்!

First Published | Aug 31, 2024, 9:11 AM IST

நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தலையணைக்கு அடியில் சில பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. நாணயம், கத்தி, வாசனைப் பூக்கள், பகவத் கீதை, ஏலக்காய், தண்ணீர், சோம்பு, பூண்டு போன்றவை இதில் அடங்கும்.

Vastu tips to get good luck

இந்த பரபரப்பான கால அட்டவணையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றை கடைபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி சில எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில வாஸ்து டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் தலையணையின் கீழ் சில பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  

Coins

நாணயம்

நாணயம் நல்ல நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தூங்குவதற்கு முன், நீங்கள் அதை கிழக்கில் வைக்கவும், தூங்கும் போது நாணயத்தை தலையணையின் கீழ் வைத்து தூங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், செழிப்பையும் மேம்படுத்த முடியும் என்பது ஐதீகம். 

Tap to resize

Knife

கத்தி

மன அழுத்தத்தின் காரணமாக நீங்கள் கெட்ட கனவுகளை கண்டால், உங்கள் தலையணையின் கீழ் கத்தியை வைத்துக் கொண்டு தூங்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மன நிம்மதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Flower

வாசனைப் பூக்கள்

ஒரு இனிமையான மற்றும் வசதியான சூழலை உருவாக்க மக்கள் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதையும், தூபக் குச்சிகளை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது மன அமைதியை ஊக்குவிக்கிறது. இதேபோல், நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் தலையணையின் கீழ் வாசனை பூக்களை வைத்திருக்கலாம். இது உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்தவும், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

Bhagavad Gita

பகவத் கீதை

'பகவத் கீதை' என்பது புனித நூல் என்பதை தாண்டி, இது கடினமான காலங்களில் உங்களை வழிநடத்தும் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. எதிர்மறை ஆற்றலைத் தடுக்க பகவத் கீதை புத்தகத்தை உங்கள் தலையணையின் கீழ் வைக்கலாம். எனினும் புத்தகத்தை படுக்கையில் வைக்கக்கூடாது என்பதால் அருகில் ஒரு ஸ்டாண்டில் வைக்கலாம்.

Cardomom

ஏலக்காய்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஏலக்காயை தலையணையின் கீழ் வைத்திருந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. இது உங்களை நிம்மதியாக உணரவும், மன அழுத்தத்திலிருந்து உங்கள் மனதை விடுவிக்கவும் உதவும்.

Copper

காப்பர் பாட்டில்

காப்பர் பாட்டில் அல்லது ஜக்கில் தண்ணீர் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அதை உங்கள் நைட்ஸ்டாண்டில் அல்லது தரையில் வைக்கலாம். இது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும், இரவில் தாகத்துடன் எழுந்தால், தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தூங்கலாம்.

Fennel Seeds

சோம்பு

வாஸ்து சாஸ்திரத்தில், சோம்பு ராகு தோஷத்தை சரிசெய்வதோடு தொடர்புடையது. இது உங்கள் உடல்நலம் மற்றும் மன அமைதியை சீர்குலைக்கும் மன அழுத்தத்தை அகற்ற உதவும்.

Garlic

பூண்டு

உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் தலையணைக்கு அடியில் பூண்டை வைத்துக்கொள்ள வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கும். வாசனை பிடிக்கவில்லை என்றால், அதில் கிராம்புகளையும் சேர்த்து வைக்கலாம்.

Latest Videos

click me!