நீங்க தவறாமல் படிக்கவேண்டிய 5 புத்தகங்கள் - பரிந்துரைப்பது முகேஷ் அம்பானி!

Must Read Books : உண்மையில் இக்கால தலைமுறையினரிடம் குறைந்துகொண்ட வரும் விஷயங்களில் ஒன்று தான் புத்தக வாசிப்பு.

Bhagavad Gita

சிறுவயது முதலிலேயே நாம் புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தினால், அது நாம் வளர்ந்த பிறகு பல்வேறு வகையில் நமக்கு உதவுகின்றது. அதேபோல இளம் வயதில் நாம் படிக்கும் புத்தகங்கள் நம் வாழ்க்கையின் ஓட்டத்தையே மாற்றிவிடும் என்றும் சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றது. இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் மகேஷ் அம்பானி பரிந்துரைத்துள்ள, நிச்சயம் படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பகவத் கீதை 

உண்மையான பகவத் கீதையில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை 745 ஆகும். மகாபாரதத்தின் அம்சங்களை சொல்லும் இந்த கீதை முதல் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில், அதாவது இப்பொது நடைபெறும் சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது என்கிறார் முகேஷ் அம்பானி.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?

Big Little Breakthroughs

Big Little Breakthroughs

பிரபல எழுத்தாளர் ஜோஷ் லிங்க்ஹ்ர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் Big Little Breakthroughs. உங்கள் வாழ்க்கையில் பல நாள் கழித்து உங்களுக்கு கிடைக்கப்போகும் பெறிய வெகுமதிக்கு இன்றே அதற்கான சிறு சிறு பணிகளை எப்படி செய்யவேண்டும் என்பது குறித்த ஒரு அழகிய புத்தகம் இது.


thinking fast and slow

Thinking Fast and Slow 

டேனியல் கான்மேன் எழுதிய புத்தகம் தான் இது, கடந்த 2011ம் ஆண்டு வெளியான அறிவியல் சார்ந்த இந்த புத்தகம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. ஒவ்வொரு வகை சிந்தனை, அதன் செயல்முறையுடனும் தொடர்புடைய பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவு அல்லாத உந்துதல்கள் மற்றும் அவை எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது என்பதை தான் இந்த புத்தகம் விவரிக்கிறது.

Post Pandemic World

Ten Lessons for a Post Pandemic World

பிரபல எழுத்தாளர் ஃபரீத் ஜகாரியா எழுதிய பிரபல புத்தகம் இது, பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உள்ள உலகம் மற்றும் அது எப்படியெல்லாம் மாறும் என்பது குறித்து அவருடைய கற்பனையில் எழுதப்பட்ட புத்தகமிது.

wealth of nations

The Wealth of Nations 

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1774ம் ஆண்டு ஆடம் ஸ்மித் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் தான் இது. சுமார் 17 ஆண்டுகாலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு, ஒரு தேசத்தின் சக்தி எப்படி உயர்கிறது என்பதை கணித்து ஆடம் எழுதிய புத்தகம் தான் இது.

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க செல்லப் பிராணியை கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்க!

Latest Videos

click me!