அம்பானி குடும்பத்தின் ஒப்பனை ரகசியம் இவர்தான்! ஒரு முறை மேக்கப் போட எவ்வளவு தெரியுமா?

Published : Aug 30, 2024, 02:19 PM ISTUpdated : Aug 30, 2024, 05:52 PM IST

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி எப்போதும் அழகாகவும், தன்னை பொருத்தமாகவும் வைத்துக் கொள்கிறார். அவரது அழகிய தோற்றத்திற்குப் பின்னால் மிக்கி கான்ட்ராக்டர் என்ற ஒப்பனைக் கலைஞர் இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மிக்கி, நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோக் மேத்தா உள்ளிட்ட பலருக்கு ஒப்பனை செய்துள்ளார்.

PREV
13
அம்பானி குடும்பத்தின் ஒப்பனை ரகசியம் இவர்தான்! ஒரு முறை மேக்கப் போட எவ்வளவு தெரியுமா?

இந்திய கோடீஸ்வரர், முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானி மிகவும் வெற்றிகரமான பெண்களில் ஒருவர், மேலும் அவர் மிகவும் ஸ்டைலான தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 59 வயதிலும், நீதா அம்பானி எப்பொழுதும் போல் அழகாகவும், தன்னை பொருத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்கிறார். அது எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும், நீதா எப்பொழுதும் மிகவும் பிரமிக்க வைக்கும் ஆடைகளையும், அதற்கேற்றார் போல் அணிகலன்களையும் அணிவார் மற்றும் அவரது ஆன்-பாயிண்ட் மேக்கப் மூலம் அவர் மேலும் பிரகாசமாகத் தெரிகிறார். அவ்வளவு பொலிவுடன் காணப்படும் நீதா அம்பானியின் அழகான தோற்றத்திற்கு முக்கியக் காரணம் அவரது ஒப்பனைக் கலைஞரான மிக்கி காண்ட்ராக்டர் என்பது பலருக்கும் தெரியாது.
 

23
Nita Makeup Artist Micky

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மிக்கி கான்ட்ராக்டர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக வலம் வருகிறார். அனைத்து பாலிவுட் பிரபலங்களில் மிக முக்கிய மற்றும் விரும்பப்படும் ஒரு ஒப்பனைக் கலைஞர் என்றார் அவர் மிக்கி கான்ட்ராக்டர் தான்.

மிக்கி கான்ட்ராக்டரின் பாலிவுட் பயணம் 1992ம் ஆண்டில் பாலிவுட் நடிகை கஜோலின் முதல் படமான "பெகுடி" திரைப்படத்தில் தொடங்கியது. அவரது மேக்கப்பில் கஜோல் தேவதையாக மின்னினார் என்றால் மிகையல்ல. பின்னர் பாலிவுட்டின் எண்ணற்ற மெகாஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மிக்கி கான்ட்ராக்டர் பணியாற்றி உள்ளார்.
 

33

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் மருமகள் ஷ்லோக் மேத்தா ஆகியோருக்கும் மிக்கி கன்ட்ராக்டர் தான் ஒப்பனை கலைஞர். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது ஒரு அமர்வுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மேக்கப் கலைஞர்களில் ஒருவராக உள்ளார்.

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா மற்றும் கஜோல் என அனைத்து முன்னணி நடிகைகளின் மேக்கப் கலைஞராக மிக்கி கான்ட்ராக்டர் இருந்து வருகிறார். "ஹம் ஆப்கே ஹை கோன்", "தில் தோ பாகல் ஹை", "குச் குச் ஹோதா ஹை", "கல் ஹோ நா ஹோ," மற்றும் "மை நேம் இஸ் கான்" உட்பட மேலும் பல பாலிவுட் படங்களில் மிக்கி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

 

Read more Photos on
click me!

Recommended Stories