சமந்தாவை காப்பி அடித்த ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட்.. வைரலாகும் போட்டோ..

First Published | Aug 9, 2024, 12:21 PM IST

ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Anant Ambani Radhika Merchant

ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அம்பானி குடும்பத்தினரின் ஆடம்பர உடைகள், அணிகலன் குறித்து தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Radhika Merchant

அந்த வகையில் ராதிகா மெர்ச்சண்ட் தனது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் போது அணிந்திருந்த கவுன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. ஆனந்த் அம்பானியின் காதல் கடிதங்களால் அலங்கரிக்கப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் கவுனை ராதிகா அணிந்திருந்தார். ஆனால் இதுபோன்று ஆடையில் காதல் கதையை சொல்லும் முதல் நபர் ராதிகா இல்லை.

Tap to resize

Samantha Engagement Saree

நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா தனது நிச்சயதார்த்த புடவையில் தனது காதல் கதையை எம்ப்ராய்டரி வடிவில் செய்திருந்தார். தனது காதல் தருணங்களின் புகைப்படங்களை புடவையில் அழகாக வடிவமைத்து அணிந்திருந்தார் சமந்தார். ராதிகாவின் ஃபேஷன் சமந்தாவின் நிச்சயதார்த்த புடவை யோசனையை ஒத்துள்ளது

Samanatha Engagement Saree

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடனான நிச்சயதார்த்தத்திற்காக, தங்க இழைகளால் செய்யப்பட்ட வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்தார். இருப்பினும், சமந்தா மற்றும் சைதன்யாவின் காதல் கதையை விவரிக்கும் சிக்கலான வேலைகளால் அலங்கரிக்கப்பட்ட சேலை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 

Samantha Naga Chaitanya

சமந்தா நாக சைதன்ய மீதான அன்பை தனித்துவமாக வெளிப்படுத்தியாக பலரூம் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் சமந்தாவின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமாகி 4 ஆண்டுகளிலே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங்க் இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஜோடிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!