அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஜூலை 12ந் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. அம்பானி மகன் திருமணத்தில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொண்டு ஆட்டம்போடும் அளவுக்கு அமர்க்களமாக நடந்து முடிந்தது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ஜோடியின் திருமணம்.
24
Priya atlee at anant ambani wedding
அம்பானி மகன் திருமணத்தில் மற்றுமொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் அதில் ஒளிபரப்பட்ட குறும்படம் தான். ஆனந்த் அம்பானி பற்றிய இந்த குறும்படத்தை இயக்கியது வேறுயாருமில்லை இயக்குனர் அட்லீ தான். மேலும் இந்த குறும்படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அம்பானியே விரும்பும் இயக்குனராக மாறியுள்ள அட்லீ, ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்விலும் முதல் ஆளாக ஆஜரானார்.
அட்லீ உடன் அவரது மனைவி பிரியாவும் வந்திருந்தார். ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பிரியா அட்லீ அணிந்து வந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அந்த ஆடையில் ஆனந்தின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார் பிரியா. ஆனந்த் மீதுள்ள நட்பை இதன்மூலமாக பிரியா வெளிப்படுத்தி இருந்தாலும், அதை இணையவாசிகள் விமசித்ததையும் பார்க்க முடிந்தது.
44
Priya Atlee Dress Cost
இந்த நிலையில், அம்பானி மகன் திருமணத்திற்கு பிரியா அட்லீ அணிந்து வந்த ஆடையில் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட அந்த ஸ்டைலிஷ் ஆடையின் விலை ரூ.3 லட்சம் இருக்குமாம். இதை அறிந்த நெட்டிசன்கள் இவ்வளவு காஸ்ட்லியான ஆடையிலா பிரியா அட்லீ வந்தார் என வாயடைத்துப் போய் உள்ளனர்.