Vastu Tips
இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பல்வேறு நிபுணர்கள் வீட்டின் புதிய கட்டமைப்பை பரிந்துரை செய்வார்கள். இல்லையென்றால், ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டிய சூழல் இருக்கும். வாஸ்து குறைபாடு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. சில வீடுகளில் எல்லாம் துர்மரணங்கள் கூட வாஸ்துவினால் நிகழ்ந்துள்ளன.
Vastu Tips
சில நேரம் வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும், வீட்டில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட வாஸ்து குறை இருக்குமோ? என்கிற பயம் உண்டாகிறது.
எனவே, நீங்கள் இதையெல்லாம் செய்யாமல் எளிதாக வீட்டிலேயே வாஸ்து குறை நீங்க இந்த பரிகாரம் செய்யலாம். அப்படியான, ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
Vastu Tips
உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், முதலில் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் ஸ்படிக லிங்கம் போட்டு அதில் பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். வீட்டின் வரவேற்பறையில் இதனை வைத்து விட்டால் போதும். எந்த ஒரு வாஸ்து குறைபாடும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வாஸ்துவினால் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் நீங்கி பல்வேறு நன்மைகள் நடைபெறும். சிறிய அளவிலான ஸ்படிக லிங்கத்தை போட்டால் கூடப் போதும். இந்த, ஸ்படிக லிங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்கும்.
மேலும் படிக்க..September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா