இருப்பினும், 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.