Fat Burning Drinks:
இன்றைய நவீன வாழ்கை முறையில் சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. உடல் மெலிதாக இருக்கும் சிலருக்கு கூட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை, மோசமான உணவு பழக்க வழக்கம் போன்றவை ஆகும். சிலர் கொலஸ்ட்ராலை கரைக்க தொடர்ந்து முயற்சி செய்தாலும், சிலருக்கும் விரும்பிய பலன் கிடைப்பதில்லை. சிலருக்கு என்ன செய்தாலும் தொப்பை குறைந்த பாடு இருக்காது.. எனவே, நாம் இந்த பதிவில் தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் சில மேஜிக் பானங்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க..Black Pepper: கருப்பு மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை
Fat Burning Drinks:
தேன், இலவங்கப் பட்டை:
இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன. இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது. இந்த இரண்டு பொருள்களும் சேர்த்து பருகும் போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. எனவே, இலவங்கப் பட்டையும் தேனும் சேர்க்கப்பட்ட தேநீர் உடல் நலனுக்குப் பெரிதும் பயன்படுகிறது.
Fat Burning Drinks:
தேவையானப் பொருள்கள்:
இலவங்கப் பட்டைத் தூள் -1/4 டீஸ்பூன்
தேன் -1 டீஸ்பூன்
தண்ணீர் -1 கப்
செய்முறை:
முதலில் இலவங்கப் பட்டைத் தூளைச் சேர்த்த தண்ணீரை 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதனை ஒரு கப்பில் ஊற்றி, அதனோடு தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் பருகலாம்.