
குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை கண்ணும் கருத்துமாக பார்ப்பது பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எப்போது எதை கொடுக்க வேண்டும்? கொடுக்கக் கூடாது? போன்ற அனைத்து விஷயங்களையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, புதிதாக பிறந்த குழந்தையின் விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், குழந்தைகளின் குழந்தைகளின் ஆடைகளை இரவில் வெளியில் காய வைக்க கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். அதற்கான காரணம் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இரவு நேரத்தில் குழந்தைகளின் ஆடைகளை வெயிலில் காய வைப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மத நம்பிக்கையின் படி பலர் நம்புகிறார்கள். அதனால் பலரும் அதையே பின்பற்றுகிறார்கள். மேலும் அறிவியல் கண்ணோட்டத்தில் இது நல்லதல்ல என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இப்போது இரவு நேரத்தில் குழந்தைகளின் ஆடைகளை ஏன் வெளியில் காய வைக்க கூடாது என்பதற்கான அறிவியல் மற்றும் வாஸ்து காரணங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
வாஸ்து காரணம்:
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வீடு கட்டுவது முதல் பொருட்கள் வாங்கி, அதை வீட்டில் வைப்பது வரை என அனைத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்தை தான் பின்பற்றுவார்கள் அது போல வாஸ்து சாஸ்திரத்தின் படி குழந்தைகளின் ஆடைகளை இரவு நேரத்தில் வெளியில் காய வைக்கக்கூடாது. ஏனெனில் இதனால் எதிர்மறை ஆற்றல் பரவும். அதாவது இரவு நேரத்தில் எதிர்மறை உச்சியில் இருப்பதால் அந்த சமயத்தில் குழந்தைகளின் துணியை வெயிலில் காய வைத்தால் வீட்டில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என்று சொல்லுகின்றனர். அதனால் தான் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இரவு நேரத்தில் குழந்தைகளின் துணியை வெயிலில் காய வைக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்
அறிவியல் காரணங்கள்:
அறிவியல் கண்ணோட்டத்தின் படி, இரவு நேரத்தில் குழந்தைகளின் ஆடைகளை வெளியில் காய வைத்தால் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஆடைகளில் ஒட்டிக் கொள்ளும். அதாவது இரவு நேரத்தில் பணி காரணமாக ஆடைகள் ஈரப்பதமாக இருக்கும். இதனால் அவற்றில் பலவகையான கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் அமர்ந்து கொள்ளும் மற்றும் சீக்கிரமாகவே வளரும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு அந்த ஆடையை அணிந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை அல்லது தடிப்பு பிரச்சினை ஏற்படும்.
இதையும் படிங்க: பெர்பியூம் போடுற குழந்தைகளுக்கு 'கணக்கு' வராதாம்.. ஏன் தெரியுமா?
பகலில் ஏன் காய வைக்க வேண்டும்?
சூரிய ஒளி:
ஆடைகளில் ஒட்டியிருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அளிக்க சூரிய ஒளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைகளின் ஆடைகளை சூரிய ஒளியில் காய வைத்தால் சூரிய ஒளியின் கதிர்வீச்சுகள் துணியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது.
துர்நாற்றம் நீங்கும்:
குழந்தைகளின் ஆடையில் சூரிய ஒளி படும்போது ஆடையில் ஈரப்பதத்தால் உருவாகும் துர்நாற்றம் நீங்கும். சொல்லப்போனால் சூரிய ஒளியில் காயவைத்த ஆடையில் துர்நாற்றம் இருக்காது சுத்தமாக இருக்கும். மேலும் விரைவாகவும் காய்ந்து விடும்.