Washing Dishes at Night in Tamil
உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே கிச்சனை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக இரவு தூங்கும் முன் சிங்கில் பாத்திரங்களை கழுவி சுத்தமாக வையுங்கள். ஆனால் பலர் இதை சரியாக செய்வதில்லை. தூங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டுவதால் இரவு முழுவதும் சிங்கிள் பாத்திரங்களை அப்படியே போட்டு விடுகிறார்கள். பிறகு மறுநாள் காலை தான் பாத்தரங்களை அவசர அவசரமாக சுத்தம் செய்கிறார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. மேலும் இது நல்ல நடைமுறை அல்ல என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. சிங்கிள் பாத்திரங்களை இரவு முழுவதும் அப்படியே போட்டு வைப்பதால், அதனால் ஏற்படும் உடல் நல்ல பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Washing Dishes at Night in Tamil
அதுமட்டுமின்றி இரவு அழுக்கு பாத்திரங்களை போட்டுவிட்டு தூங்குவது வீட்டில் லட்சுமி தேவி வருவதை தடுக்கிறது என்று இந்து மதத்தில் நம்பிக்கை ஒன்று உள்ளது தெரியுமா? ஆம், இரவில் பாத்திரங்களை கழுவாமல் சிங்கிள் அப்படியே விட்டு தூங்குபவரின் வீட்டில் பணம் தங்காது; பண பிரச்சினை தான் அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதனால்தான் இரவு பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு தூங்க வேண்டும் என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள். சிங்கிள் இரவு முழுவதும் பாத்திரங்களை வைப்பது நல்லதல்ல என்பதற்கான அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Washing Dishes at Night in Tamil
இரவு உணவிற்கு பிறகு பாத்திரங்களை அப்படியே சிங்கிள் வைப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். உண்மையில் இரவு முழுவதும் அழுக்கான பாத்திரங்கள் சிங்கில் இருப்பதால் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக e.coil போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் அதில் வளரும். பல நேரங்களில் இந்த பாக்டீரியாக்கள் கிச்சனின் எல்லா இடங்களிலும் பரவும்.
இதையும் படிங்க: வெந்நீர் வைச்சு ஸ்டீல் பாட்டில் இப்படி இருக்கா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!
Washing Dishes at Night in Tamil
அழுக்குகளில் வளரும் இந்த பாக்டீரியாக்கள் வீட்டில் உள்ள அனைவரதும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குறிப்பாக இந்த பாக்டீரியாக்கள் நேரடியாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி உங்களை பலவீனமாக்கும் இதனால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அதன் காரணமாக பலவிதமான தொற்று நோய்கள் உங்களை தாக்கும் அபாயம் உள்ளது. இது தவிர, இந்த இந்த பாக்டீரியாக்களால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இந்த பாக்டீரியாக்களின் வீரியத்தால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும்.
Washing Dishes at Night in Tamil
முக்கிய குறிப்பு:
ஆகவே சாப்பிட்ட உடனே பாத்திரங்களை கழுவி விடுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தால் சாப்பிட்ட 2-3 நேரத்திற்குள் கண்டிப்பாக பாத்திரங்களை கழுவி விடுங்கள் முக்கியமாக பாத்திரங்களை கழுவும் முன் சிங்கள் உணகள் ஏதும் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் பாக்டீரியாக்கள் பரவாது.
இதையும் படிங்க: வீட்டில் ஈக்கள் தொல்லையா? உடனே 'இத' மட்டும் பண்ணுங்க.. இனி வரவே வராது!!