Dry Clothes In Rainy Season : மழைக்காலத்தில் துணிகள் காய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனவே இந்த சிக்கலை சரி செய்வதற்கான சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மழை வந்தாலே கூடவே சில பல பிரச்சனைகளும் வருவது பொதுவானது. அதிலும் குறிப்பாக துவைத்த துணியை காய வைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஒருவேளை அப்படி காய்ந்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமல் குளிர்ச்சியாக இருப்பதால் துணிகள் உலர நீண்ட நேரம் எடுக்கும். இதே பிரச்சினையை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் என்றால், இந்த சிக்கலை தீர்ப்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
25
Dry Clothes In Rainy Season In Tamil
துணிகளை நன்கு பிழியவும்:
நீங்கள் துவைத்த துணியை நன்றாக பிழிந்தால் அதிலிருந்து நீர் வெளியேறிவிடும். இப்போது அந்த துணியை நீங்கள் காய வைத்தால் சிறிது நேரத்தில் அது நன்கு காய்ந்து விடும். முக்கியமாக இந்த முறையானது ஜீன்ஸ், ஸ்வெட்டர் போன்ற கனமான துணிகளுக்கு மிகவும் ஏற்றது.
35
Dry Clothes In Rainy Season In Tamil
சுழல் சுழற்சி:
நீங்கள் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது அதில் சுழல் சுழற்சி என்ற ஆப்ஷன் உள்ளது. அது உங்கள் துணிகளில் இருக்கும் கூடுதலான தண்ணீரை அகற்ற உதவுகிறது. வாஷிங் மிஷினில் இந்த முறையில் உங்கள் துணிகளை துவைத்து காய வைத்தால் சீக்கிரமாகவே உலர்ந்து விடும்.
துணிகளை துவைத்தும் சரியாக காயவில்லை என்றால் ஹேர் டிரையரை நீங்கள் பயன்படுத்தலாம். இது ஈரமான ஆடைகளில் இருக்கும் ஈரத்தை சுலபமாக அகற்றி விடும். இதற்கு ஹேர் டிரையரை துணியிலிருந்து சில அங்குலம் தூரத் வைத்து அதிலிருந்து வரும் சூடான காற்றை காட்டினால் துணி முழுமையாக காய்ந்து விடும். முக்கியமாக இந்த முறையானது சிறிய ஆடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் துணியை துவைத்தால் அதை காய வைப்பதற்கு நீங்கள் துணியில் இருந்து ஆடையை நன்றாக பிழிந்து எடுக்கவும். பிறகு உங்கள் வீட்டின் இருக்கும் மின்விசிறி மூலம் ஆடைகளை காய வைக்கவும். இதனால் குறைந்த நேரத்திலேயே துணிகள் உலர்ந்து விடும்.