
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை என்று எண்ணெய் குளியல் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இன்றோ மாதத்திற்கு ஒரு முறை தான் அதையும் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சிலரோ தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். இப்படி தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள் எண்ணிக்கை தான் தற்போது அதிகமாக உள்ளது. அப்படியும் சிலர் கடமைக்கு லேசாக உச்சந்தலையில் தடவி குளிக்கிறார்கள். ஆனால் குளிக்கும் முன் எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா? அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பிறகு குளித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கண்டிபாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும் அவ்வாறு குளித்தால் வறட்சி நீங்கி, சருமம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, பல நோய்களும் விலகி ஓடும்.
தலைமுடிக்கு நல்லது:
உங்களது உடல் குளிர்ச்சியாக இருந்தாலோ அல்லது உஷ்ணமாக இருந்தால் நல்லெண்ணையை மிதமாக சூடுப்படுத்தி, அதை உங்களது உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உச்சந் தலையில் சூடு பறப்பதை நீங்கள் உணர்வீர்கள். அதுமட்டுமின்றி, பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி நன்றாக வளர உதவும்.
சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்:
குளிக்கும் முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் அரிப்பு, தடிப்புகள் போன்றவை தடுக்கப்படும். முக்கியமாக எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இதை லேசாக சூடாக்கி உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து பின் குளித்தால் உடலில் இருந்து நச்சுக்களை அனைத்தும் வெளியேறும்.
இதையும் படிங்க: குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!
மூட்டு வலி நீங்கும்:
புலிக்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மூட்டுகள் இருக்கும் பகுதிகளில் அதிகப்படியான எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் இடுப்பு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, வாதம் போன்ற பிரச்சனை நீங்கும். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே மூட்டுப் பகுதிகளில் என்ன மசாஜ் செய்து வந்தால் அவர்களது மூட்டுகள் வலுவாக இருக்கும்.
இதையும் படிங்க: குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
இப்போதெல்லாம் எண்ணெய் குளியல் செய்யலாம்?
ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தான் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்று ஆன்மீக காரணங்கள் உண்டு. அதுபோல காலை 5 மணி முதல் 7 மணிக்குள் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிப்பதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. மிதமான சூட்டில் இருக்கும் நீரை தான் பயன்படுத்த வேண்டும்.
நினைவில் கொள்:
- எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது ஷாம்பு பயன்படுத்துவதற்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
- இதுபோல என்னை குலிகளுக்கு பிறகு தயிர், இளநீர், மோர், குளிர்ந்த பொருட்கள் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் என எதையும் சாப்பிட வேண்டாம்.
ஆரோக்கியம் நிறைந்த எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்ததோடு மட்டுமின்றி உங்கள் தலைமுறைக்கும் சொல்லிக் கொடுங்கள்.