உடற்பயிற்சிகளிலேயே நடைபயிற்சி தான் மிகவும் எளிதானது. தினமும் காலை அல்லது மாலை சில நிமிடங்கள் நடப்பது கூட நம் உடலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். ஆனால் தினமும் இதை செய்ய வேண்டும். பொதுவாக சிலர் ஒரு நாள் அல்லது இருநாள் செய்துவிட்டு பலன் எதிர்பார்ப்பார்கள். அப்படி செய்வதால் பலன்கள் இருக்கும். ஆனால் வெளிப்படையாக தெரியமளவுக்கு பலனிருக்காது. உங்களுடைய தசைகள் வலுப்பெறுவது, முதுகுவலி நிவாரணம், இதய ஆரோக்கியம் உள்ளிட்டவை நெடுநாள் பயணத்தின் விளைவாக கிடைக்கக் கூடியவை.
25
Walking depends Age in tamil
ஆய்வுகளின்படி, ஒருவர் ஒரு நாளில் 8 கிலோமீட்டர் நடப்பது நல்லதென்கிறார்கள். அதற்காக உடனே தினமும் 8 கிமீ ஒரே நேரத்தில் நடக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வேலைகளுக்கு நடுவே நாம் நடப்பது காலை விழித்தது முதல் இரவு உறங்குவது வரையில் 8 கிமீ நடப்பது ஆரோக்கியம் என்கிறார்கள். இது அனைவருக்கும் சாத்தியம் கிடையாது. எப்படி ஆரோக்கியத்தை வயதிற்கேற்றபடி மேம்படுத்துவது என இந்த பதிவில் காணலாம்.
ஒரு நாளில் குறைந்தபட்சம் 9 ஆயிரம் காலடிகள் நடந்தால் அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
18 முதல் 59 வயதுக்காரர்கள்: ஒரு நாளில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும்.
60 வயது முதியோர்:
ஒரு நாளில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும். வயதாகும்போது நடைப்பயிற்சி சற்று சிரமமாக தான் இருக்கும் ஆனாலும் தினமும் குறைந்தபட்ச தூரத்தை யாவது நடந்து கடந்தால் அது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய பலனளிக்கும்.
45
Walking depends Age in tamil
நடைபயிற்சி எவ்வாறு பலனளிக்கும்?
உடல் எடை குறைப்பிற்காக நடைபயிற்சி செய்தால் வேகமாக நடப்பதை பழக்கப்படுத்த வேண்டும். சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் நடக்கும்போது அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறைய வழி வகுக்கிறது.
தசை வலுவாகும்:
மிதமான நடப்பயிற்சி தசைகளுக்கு இயக்கத்தை கொடுக்கும். சுறுசுறுப்பான நடை பயிற்சி தசைகளை உறுதியாக்க உதவுகிறது.
நாள்தோறும் 30 முதல் 40 நிமிடங்கள் நீங்கள் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடைபயிற்சி செய்து வந்தால் உங்களுடைய மூட்டுகள் வலிமை அடையும்.
ஆயுட்காலம்:
தினமும் நடைபெற்று செயல்பாடுகள் உடைய ஆயுட்காலம் 11 ஆண்டுகள் அதிகரிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடைபயிற்சி பல நோய்களின் தீவிரத்தை குறித்து உங்களுடைய வாழ்நாள்களை நீட்டிக்கிறது.