
சர்க்கரை நோயாளிகள் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஏனெனில் சீரான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. நன்கு சீரான காலை உணவானது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமின்றி நாள் முழுவதும் ரத்த சர்க்கரையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தடுத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. ஒருவேளை சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் ரத்த சர்க்கரை அதிகரிக்க செய்யலாம் மற்றும் நீண்டகால சிக்கலின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு சீர்குலையும்:
சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் நாளின் பிற்பகுதியில் ரத்த சர்க்கரை அளவு உயரலாம். பிறகு சாப்பிடும் உணவுகள் மிகவும் வலுவான குளுக்கோஸ் அளவை தூண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் காலப்போக்கில் கிளைசெமிக் மாறுபாட்டை அதிகரிக்கும். இதனால் ஆரோக்கிய மோசமாக பாதிக்கப்படும்.
மோசமான இன்சுலின் எதிர்ப்பு:
இன்சுலின் எதிர்ப்பு, அதாவது டைப் 2 நீரிழிவு நோயாளியின் இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடலின் திறன் தடுக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் இன்சுலின் எதிர்ப்பு மோசமாகும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன மேலும் குளுக்கோஸ் ஒழுங்கு முறையையும் சவாலாக்கும். இது தொடர்ந்து நீடித்தால் சர்க்கரை நோயாளியின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
நீண்டகால அபாயங்கள்:
சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் நாள்பட்ட உயர் ரத்த சர்க்கரை அளவுகள் ஆபத்தை அதிகரிக்கும். இது தொடர்ந்து நீடித்தால் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: இஞ்சி டீயா? இல்லங்க.. இலவங்கப்பட்டை 'டீ' குடிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு தான் இவ்ளோ நன்மைகள்!!
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்றத்தாழ்வு:
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. ஒருவேளை இந்த உணவுகளை தவிர்த்தால் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை சீர்குலைந்து எடை அதிகரிப்பு வழிவகுக்கும்.
உளவியல் தாக்கம் ஏற்படும்:
சர்க்கரை நோயாளிகள் காலை உணவு தவிர்ப்பது வெறும் உடல் சார்ந்தவை அல்ல உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலையற்ற ரத்த சர்க்கரை அளவுகளின் விளைவாக மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இது தவிர அதிகப்படியான பசியால் மோசமான உணவுகளை சாப்பிட தூண்டும், மேலும் கவனம் சிதறல் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காலை உணவுகள்:
ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டை மேம்படுத்த சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது:
- முழு தானியங்கள், ஓட்ஸ் போன்ற குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கார்ப்கள், சக்தியை சீராக வெளியிடுகிறது.
- முட்டை, தயிர், டோஃபு போன்ற ஒல்லியான புரதங்கள் ரத்த சர்க்கரையை நிலை நிறுத்துகிறது.
- அவர்காடு நட்ஸ்கள் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றது.
- காய்கறிகள் அல்லது சியா சியா விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானம் மற்றும் திருப்தியை ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்.. காரணம் இதுதான்!!